அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை புதிய உச்சம்டிரம்ப் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை புதிய உச்சம்டிரம்ப் மீது எதிர்க்கட்சி ... ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 70.18 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 70.18 ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு வரி தள்ளுபடி:சர்வதேச போட்டியை சமாளிக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2019
00:16

புதுடில்லி:ஆயத்த ஆடை மற்றும் வீட்டு பயன்பாட்டு ஜவுளிகள் ஏற்றுமதிக்கு, வரி தள்ளுபடி அளிக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.டில்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.


இதில், ஆயத்த ஆடை மற்றும் திரைச்சீலை, போர்வை, படுக்கை விரிப்பு உள்ளிட்ட வீட்டு பயன்பாட்டு ஜவுளிகள் ஏற்றுமதிக்கு, வரி தள்ளுபடி அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.தற்போது, ஜவுளி ஏற்றுமதியில், மத்திய – மாநில அரசுகளுக்கு செலுத்தப் பட்ட, முத்திரைத்தாள் கட்டணம், பெட்ரோலிய வரி, மின் வரி, சந்தை வரி ஆகியவற்றை, சிறப்பு திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெறுகின்றனர்.


இந்த சலுகை, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு பயன்பாட்டு ஜவுளி ஏற்றுமதிக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய ஜவுளி துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறியதாவது:


நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு பயன்பாட்டு ஜவுளிகளின் பங்கு, 55 சதவீதமாக, அதாவது, 2,100 கோடி டாலராக உள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 1.47 லட்சம் கோடி.இப்பிரிவுகளுக்கு, வரி தள்ளுபடி சலுகை வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.


சர்வதேச போட்டி


இதன் மூலம், இப்பிரிவுகளின் ஏற்றுமதியை, வரிச் சுமையின்றி மேற்கொள்ள முடியும் என்பதால், இந்திய நிறுவனங்கள், சர்வதேச போட்டியை சுலபமாக சமாளிக்கலாம்.வரி தள்ளுபடி சலுகை காலத்தை, 2020, மார்ச், 31 வரை நீட்டிக்கவும், கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயத்த ஆடைகள், வீட்டு பயன்பாட்டு ஜவுளி தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பயன் பெறுவர்.


விரைவாக கிடைக்கும்



மத்திய – மாநில அரசுகளுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து, ஜவுளி துறையினர் கவலை தெரிவித்தனர்.இதற்கு தீர்வாக, செலுத்திய வரியை உடனே திரும்பப் பெற, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, ‘ஸ்கிரிப்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கணினி வாயிலான நடைமுறைகள் மூலம், ஏற்றுமதியாளர்கள், செலுத்திய வரியை விரைவாக பெறலாம்.


ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை வளர்ச்சிக்காக, மத்திய அரசு, 2016, ஜூனில், 6,000 கோடி ரூபாய்க்கு சிறப்பு ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தது.இத்திட்டத்தின் கீழ், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு, ஊக்கத் தொகை உட்பட, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.


மூன்று மடங்கு அதிகரிக்கும்


ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும். இதன் மூலம், ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னிய செலாவணி கிடைக்கும்; 1 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பி.சி.ஜி., ஆய்வறிக்கை

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)