தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ... டி.சி.ஐ., பங்கு விற்பனை டி.சி.ஐ., பங்கு விற்பனை ...
‘வாஷிங் மிஷினு’க்கும் மின் சிக்கன குறியீடுதயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2019
23:25

புதுடில்லி:‘வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் ஓவன்’ ஆகியவற்றுக்கும், மின் சிக்கனத்திற்கான நட்சத்திரக் குறியீடு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தற்போது, ‘ஏசி, ரெப்ரிஜிரேட்டர், டிரான்ஸ்பார்மர், டி.எப்.எல்., விளக்கு’ ஆகியவற்றுக்கு, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான நட்சத்திரக் குறியீட்டை, தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயம் பெற வேண்டும்.அதேசமயம், மின்விசிறி, கெய்சர், வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் ஓவன், விவசாய பம்பு செட், ‘டிவி’ உள்ளிட்ட சாதனங்களுக்கு, தயாரிப்பு நிறுவனங்கள் விருப்பத்தின் பேரில் இக்குறியீட்டை பெறலாம்.


மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எரிசக்தி திறன் கட்டுப்பாட்டு அமைப்பான, பி.இ.இ., மின் சிக்கனத்தை குறிக்கும், நட்சத்திர குறியீட்டு அங்கீகாரத்தை வழங்குகிறது.ஒரு சாதனம், சேமிக்கும் மின்சார அளவிற்கு ஏற்ப, ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை, இக்குறியீடு வழங்கப்படுகிறது.


சேமிப்பு


ஐந்து நட்சத்திர குறியீடு, மிக அதிக அளவில் மின்சாரத்தை சேமிக்கும் சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய சாதனங்கள் விலையும், சற்று அதிகமாகவே இருக்கும்.இ ந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தும் மின் சாதனங்களின், மின் சேமிப்பு திறனை அதிகரித்து, நுகர்வோரின் மின் கட்டணச் செலவை குறைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்த, மத்திய மின்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


அதனால், வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய சாதனங்களுக்கும், மின் சேமிப்பிற் கான நட்சத்திரக் குறியீடு பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது, இச்சாதனங்கள், 2020, டிச., 31 வரை, விருப்பத்தின் பேரில் பெறப்படும் நட்சத்திரக் குறியீட்டு பட்டியலில் உள்ளன. அதன் பின், இச்சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், கட்டாயம் மின் சேமிப்பிற்கான நட்சத்திரக் குறியீட்டுடன் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.


விதிமுறை



வாஷிங் மிஷின் சாதனங்களுக்கான மின் சேமிப்பு விதிமுறைகளில், தற்போது தண்ணீர் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.குறைந்த தண்ணீரில், விரைவாக துணிகளை துவைக்கும் இயந்திரங்கள் மூலம், மின்சாரமும், தண்ணீரும் சேமிக்கப்படும் என்பதால், இந்த விதிமுறை இணைக்கப்பட்டுள்ளது.இந்த சாதனங்களை தயாரிப்போர், சுலபமாக பதிவு செய்யவும், மின் சிக்கன நட்சத்திரக் குறியீட்டை பெறவும், பி.இ.இ., வலைதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.


300 கோடி யூனிட் சேமிக்கலாம்


வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் ஓவன் சாதனங்களுக்கு, மின் சிக்கனத்திற்கான நட்சத்திரக் குறியீட்டை, கட்டாயம் ஆக்குவதன் மூலம், 2030க்குள், 300 கோடி யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் சேமிக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)