டி.சி.ஐ., பங்கு விற்பனைடி.சி.ஐ., பங்கு விற்பனை ...  என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக   புதிய நெறிமுறைகள் என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக புதிய நெறிமுறைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தை எதிர்­பார்ப்­பது என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2019
23:53

உல­கப் பொரு­ளா­தார சந்­தை­யில் நடக்­கும் மாற்­றங்­கள், நம் உள்­ளூர் சந்­தை­யி­லும் பிர­தி­ப­லிப்­பது என்­பது இயல்­பாக நடக்­கும் ஒன்று தான். உலக பொரு­ளா­தார நிகழ்­வு­கள், வெளி­நாட்டு சந்­தை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் போது, அவற்­றின் தாக்­கம் குறித்த அச்­சங்­கள், இந்­தியா போன்ற வள­ரும் நாடு­களின் சந்­தை­யி­லும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.

உலக சந்­தை­களில், முந்­தைய நாள் இரவு சரிவு நேர்ந்­தால், மறு­நாள் காலை, அனைத்து ஆசிய சந்­தை­களும் சரி­வது நடப்பு. வழக்­க­மாக காணக்­கூ­டிய ஒன்று தான்.ஆனால், சில கால­கட்­டங்­களில், இந்­திய சந்­தை­யின் போக்கு மாறக்­கூ­டும். அப்­ப­டிப்­பட்ட கால­கட்­டங்­கள் ஏற்­பட, சில முக்­கிய கார­ணங்­கள் உண்டு. அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தார மாற்­றங்­களை, சந்தை தனக்கு சாத­க­மாக எதிர்ப்­பார்ப்­பது தான் இதற்கு முக்­கிய கார­ணம்.

தற்­போ­தைய சூழ­லில், உலக சந்­தை­களில் சரிவு ஏற்­படும் போதும், இந்­திய பங்­குச் சந்தை தொடர்ந்து நிலை­யாக தோன்­று­கிறது. இது எதை வெளிப்­ப­டுத்­து­கிறது?சந்தை, சாமா­னி­ய­ரும் எதிர்­பார்க்­காத ஏதோ ஒன்றை எதிர்­பார்ப்­பது தெளி­வாக தெரி­கிறது. அது, அர­சி­யல் மாற்­றங்­கள் சார்ந்த கணிப்பு என்­பது தெளிவு.

அர­சி­யல் சார்ந்த மாற்­றங்­கள், ஒவ்­வொரு தேர்­த­லுக்கு பின்­ன­ரும் ஏற்­படும் வாய்ப்பு இருப்­ப­தால், சந்தை அந்த மாற்­றங்­களின் பாதிப்பை கூர்ந்து கவ­னிக்­கும். இந்த தேர்­த­லும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.தற்­போது, சந்தை அதிக கலக்­கம் காணா­மல் இருப்­பது, வரும் தேர்­தல் முடி­வு­கள் சார்ந்த சந்தை நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கிறது.

தேர்­தல் முடி­வு­கள், சந்­தைக்கு அதிக பாத­கம் ஏற்­ப­டுத்­தாது என்ற முடி­வுக்கு, சந்தை வந்து விட்­டது. இந்த நம்­பிக்கை, வரும் வாரங்­களில் ஏற்­படும் அர­சி­யல் மாற்­றங்­க­ளால், இன்­னும் வலு­வ­டை­ய­லாம். அப்­படி நடந்­தால், சந்தை மேலும் உய­ரக்கூட வாய்ப்பு இருக்­கக்­கூ­டும்.ஒரு­வேளை, அதி­ரடி அர­சி­யல் மாற்­றங்­கள் ஏற்­பட்­டால், அவை சந்­தை­யில் கலக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம்.

இந்த கலக்­கம், பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மும் கலக்­கத்தை உண்­டாக்­க­லாம். ஆனால், அதற்­கான வாய்ப்­புக்­கள் தொடர்ந்து குறை­யக்­கூ­டும் என்றே தோன்­று­கிறது.இதன் வெளிப்­பாடு, பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­களின் தற்­போ­தைய முத­லீட்டு போக்­கில் தெளி­வாக தெரி­கிறது.

வரும் வாரங்­களில், பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­கள், இந்­திய பங்­கு­களை இன்­னும் அதி­க­மாக வாங்­கு­வர் என்றே தோன்­று­கிறது. ஆனால், பங்கு வர்த்­த­கத்தை அவர்­கள் வேறு திசை­யில் எடுத்து செல்­வர் என்று தெரி­கிறது.இந்­திய முத­லீட்­டா­ளர்­கள் தற்­போது இதற்கு தயா­ராக இல்­லா­த­தால், அந்த மாற்­றங்­கள் ஒரு வகை­யில் அவர்­க­ளுக்கு அதிர்ச்­சி­யூட்­ட­லாம்.

அந்த மாற்­றங்­களை எதிர்­கொள்­வ­தில் காட்­டும் கவ­ன­மும், முதிர்­வுமே, ஒவ்­வொரு உள்­நாட்டு முத­லீட்­டா­ள­ரின் வெற்றி வாய்ப்­பை­யும் நிர்­ண­யிக்­கும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)