டி.சி.ஐ., பங்கு விற்பனைடி.சி.ஐ., பங்கு விற்பனை ...  என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக   புதிய நெறிமுறைகள் என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக புதிய நெறிமுறைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2019
23:56

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, இந்த ஆண்டு ஜன­வ­ரி­யில், 400 புள்­ளி­கள்; பிப்­ர­வ­ரி­யில், 500 புள்­ளி­கள் என, மொத்த ஏற்ற இறக்­கத்­து­டன் வர்த்­த­கம் முடிவு பெற்­றது.

தொடர்ந்து இரு மாதங்­க­ளாக, 10,500 முதல், 11,100 புள்­ளி­க­ளுக்கு இடையே சந்தை வர்த்­த­க­மாகி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.அதே­போல, மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் சென்­செக்ஸ், 35,000 முதல், 37,000 புள்­ளி­க­ளுக்கு இடையே, கடந்த இரு மாதங்­க­ளாக வர்த்­த­க­மாகி வரு­கிறது.

அடுத்த மாதம் நடை­பெ­ற­வி­ருக்­கும் லோக்­சபா தேர்­த­லில் ஏற்­படும் மாற்­றங்­கள், பங்­குச் சந்­தை­யில்தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.மத்­திய புள்­ளி­யி­யல் துறை, வியா­ழன் அன்று வெளி­யிட்ட, கடந்த அக்­டோ­பர் முதல், டிசம்­பர் வரை­யி­லான மூன்­றா­வது காலாண்­டில், பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம், 7 சத­வீ­த­மாக இருந்­தது. இது எதிர்­பார்த்­த­தை­விட, 0.2 சத­வீ­தம் குறைவு.

கடந்த நிதி­யாண்­டின் மொத்த வளர்ச்சி, 7.2 சத­வீ­த­மாக இருந்­தது. தற்­போது நடப்பு நிதி­யாண்­டில், 7 சத­வீ­த­மாக சரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது ஐந்து ஆண்டு குறை­வா­கும்.இரண்­டாம் காலாண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, கடந்த மூன்­றாம் காலாண்­டில் வேளாண் துறை, 2.7 சத­வீ­தம்; தொழில் துறை, 6.7 சத­வீ­தம்; கட்­டு­மா­னத் துறை, 9.6 சத­வீ­தம்; சுரங்­கத் துறை, 1.3 சத­வீ­தம் என வளர்ச்சி பெற்­றுள்­ளது.

வர்த்­த­கம், உணவு, போக்­கு­வ­ரத்து மற்­றும் தொலைத்­தொ­டர்பு துறை ஆகி­யவை, எவ்­வித வளர்ச்­சி­யை­யும் காண­வில்லை.நிதித் துறை, 7.3 சத­வீ­த­மும், அரசு செல­வி­னம் மற்­றும் பொதுப்­ப­ணித் துறை, 7.6 சத­வீ­த­மும் வளர்ச்சி கண்­டுள்­ளது. இது முந்­தைய காலாண்­டில், 8.7 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

தனி­யார் வானிலை ஆராய்ச்சி மைய­மான, ‘ஸ்கை மேட்’ 2019ம் ஆண்­டிற்­கான பரு­வ­ம­ழை­யில், 50 சத­வீத மழைக்கே வாய்ப்பு உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.தென்­மேற்கு பருவ மழை, ஜூன், 1ல் துவங்க உள்­ளது.நாட்­டின் பண­வீக்க விகி­தம், ஜன­வரி மாதத்­தில், 2.05 சத­வீ­த­மாக இருந்­தது. முந்­தைய டிசம்­பர் மாதத்­தில், 2.19 சத­வீ­த­மா­க­வும், நவம்­பர் மாதத்­தில், 2.3 சத­வீ­த­மா­க­வும் இருந்­தது.

தொடர்ந்து மூன்று மாதங்­க­ளாக, பண­வீக்க விகி­தம் குறைந்து வரு­வது, ஒரு சாத­க­மான சூழ்­நி­லைக்கு வழி­வ­குத்த போதி­லும், சர்­வ­தேச கார­ணி­கள் மற்­றும் காலாண்டு நிதி அறிக்­கை­களின் மோச­மான போக்கு ஆகி­ய­வற்­றால் சந்தை சரிந்து வர்த்­த­கம் ஆகி வந்­தது.சர்­வ­தேச சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை சரிவு, இந்­திய ரூபா­யின் மதிப்பு டால­ருக்கு நிக­ராக உயர்வு, உலக பங்­குச் சந்­தை­களில் ஏற்­பட்ட மாற்­றம் போன்­றவை, சந்தை பாதிக்­கப்­பட கார­ணங்­க­ளா­கும்.இந்த வாரத்தை பொருத்­த­வரை, நிப்டி அதன் சப்­போர்ட், 10,805, 10,750; ரெசிஸ்­டன்ஸ் 10,940, 11,000.
முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)