டி.சி.ஐ., பங்கு விற்பனைடி.சி.ஐ., பங்கு விற்பனை ...  என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக   புதிய நெறிமுறைகள் என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக புதிய நெறிமுறைகள் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2019
23:59

கச்சா எண்ணெய்
சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, கடந்த மூன்று வாரங்­க­ளாக, 1 பேரல், 54 முதல், 58 அமெ­ரிக்க டாலர் என்ற நிலை­யில், வர்த்­த­க­மாகி வரு­கிறது.வார நாட்­களில் ஏற்­றத்­தாழ்­வு­க­ளு­டன் நடை­பெற்ற வியா­பா­ரம், வார இறுதி நாளான வெள்­ளி­யன்று, சரிந்­தது.

அமெ­ரிக்­கா­வில், புதிய வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தில் ஏற்­பட்ட தொய்வு கார­ண­மாக, அங்கு, கச்சா எண்­ணெய் தேவை குறை­ய­லாம் என, கரு­தப்­ப­டு­கிறது. இந்த கண்­ணோட்­டத்­தால், 1 சத­வீ­தத்­துக்­கும் மேல் விலை சரிந்­தது.மேலும், ஐரோப்­பிய ஒன்­றி­யம் பொரு­ளா­தார வளர்ச்சி கணிப்பை குறைத்­தது. வட்டி விகி­தத்தை உயர்த்­தா­மல், அடுத்த வாரத்­துக்கு தள்­ளி­வைத்­தது. இவற்­று­டன், ஐரோப்­பிய யூனி­ய­னின் கச்சா எண்­ணெய் தேவை மீது ஏற்­பட்­டுள்ள சந்­தே­கம் ஆகி­ய­வை­யும் சேர்ந்து, சந்­தை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அமெ­ரிக்கா, ஐரோப்பா ஆகி­ய­வற்­றின் பொரு­ளா­தார நிலையை ஒட்டி, ஆசிய நாடு­களின் ஏற்­று­ம­தி­யும் சரிந்­தது. பிப்­ர­வரி மாதத்­தில், முந்­தைய ஆண்­டின் இதே மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது, 21 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை கண்­டது. இது, கடந்த மூன்று ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, மிகப்­பெ­ரிய சரிவு. மேலும், இறக்­கு­ம­தி­யும், 5.2 சத­வீ­தம் அள­வுக்கு சரிந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த டிசம்­ப­ரில் நடை­பெற்ற ஒபெக் மற்­றும் ஒபெக்­கில் இல்­லாத நாடு­களின் கூட்­டத்­தில், எண்­ணெய் விலையை உயர்த்த முடிவு செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து உற்­பத்­தி­யில், தின­சரி, 1 லட்­சத்து, 20 ஆயி­ரம் பேரல்­கள் குறைப்பை அறி­வித்­தது.கடந்த இரு மாதங்­க­ளாக இதை இந்­நா­டு­கள் அமல்­ப­டுத்தி வரு­கின்றன.

வரும், 18ம் தேதி அன்று, ஒபெக் உறுப்பு நாடு­களின் கூட்­ட­மைப்பு மற்­றும் உற்­பத்தி குறைப்பு மேலாய்வு கூட்­டம் நடை­பெற உள்­ளது. அதை தொடர்ந்து, ஏப்­ரல், 14ல் ஒபெக் மற்­றும் ஒபெக் உறுப்­பில்­லாத நாடு­களின் கூட்­ட­மைப்பு சந்­திப்பு நடை­பெற உள்­ளது.இந்த வாரத்தை பொருத்­த­வரை, 58 அமெ­ரிக்க டாலர் என்­பது மிகப்­பெ­ரிய ரெசிஸ்­டென்ஸ். இதை கடக்க இய­லாத சூழ­லில், விலை சரிந்து வர்த்­த­கம் ஆகும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தங்கம் வெள்ளி

தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, கடந்த வாரத்­தின் ஆரம்ப நாட்­களில் சரி­வில் வர்த்­த­க­மாகி வந்­தது. ஐரோப்­பிய ஒன்­றி­யம், வட்டி விகித உயர்வை அடுத்த ஆண்­டுக்கு தள்ளி வைப்­ப­தாக அறி­வித்­தது. இதற்கு, பொரு­ளா­தார வளர்ச்சி சரிவு, அதி­க­ரித்து வரும் பண­வீக்­கம் ஆகி­யவை கார­ண­மா­கும் என்று தெரி­வித்­தது. மேலும் நடப்பு ஆண்டு மற்­றும் அடுத்த இரு ஆண்­டு­க­ளுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி கணிப்பு அள­வை­யும் சற்று குறைத்­துள்­ளது.

இதன் கார­ண­மாக, சர்­வ­தேச சந்­தை­யில், யூரோ­வின் மதிப்பு குறைந்­தது. இத­னால், அமெ­ரிக்க டாலர் மதிப்பு அதி­க­ரித்­தது. இதன் விளை­வாக, தங்­கம், வெள்ளி விலை சரிந்­தது. திங்­கள் முதல் வியா­ழன் வரை, நான்கு நாட்­களும் விலை சரி­வில் வர்த்­த­க­மாகி வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

இச்­சூ­ழ­லில் வெள்­ளி­யன்று, அமெ­ரிக்­கா­வில், மாதம் ஒரு முறை வெளி­வ­ரும், விவ­சா­யம் அல்­லாத பிற அரசு துறை­களில், புதி­தாக பணி­யில் அமர்த்­தப்­பட்­டோர் விப­ரத்தை, அந்­நாட்டு புள்­ளி­யி­யல் துறை வெளி­யிட்­டது.

ஜன­வரி மாதத்தை விட பிப்­ர­வரி மாதத்­தில், மிக­வும் குறை­வான ஆட்­களே நிய­மிக்­கப்­பட்டு இருந்­த­தாக அந்த அறிக்கை தெரி­வித்­தது. இதன் கார­ண­மாக, அமெ­ரிக்க நாண­யத்­தில் ஏற்­பட்ட மாற்­ற­மும், அதன் சரி­வும், தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை உயர வழி வகுத்­தது. ஒரே நாளில், 1 அவுன்ஸ் தங்­கம், 16 அமெ­ரிக்க டாலர் அள­வுக்கு விலை உயர்ந்­தது.

மேலும், அமெ­ரிக்க மத்­திய வங்கி, அடுத்த கூட்­டத்­தில், வட்டி விகி­தத்தை உயர்த்த வாய்ப்பு குறை­வா­கவே இருக்­கும் என்ற கண்­ணோட்­டத்­தில், முத­லீட்­டா­ளர்­கள், தங்­கத்­தின் மீது முத­லீட்டு ஆர்­வத்தை திருப்­பி­ய­தால். உயர்­வுக்கு கார­ண­மாக அமைந்­தது. இந்த வாரத்த்­தில் தங்­கத்தை பொருத்­த­வரை, சர்­வ­தேச சந்­தை­யில், 1305 என்­பது ரெசிஸ்­டென்ஸ். மேலும், தின­சரி வர்த்­தக முடிவு, இதற்கு மேல் இருக்­கும் சூழ­லில், மீண்­டும் விலை உயர்ந்து வர்த்­த­க­மாக வாய்ப்பு உள்­ளது.
செம்பு
கடந்த வாரம், செம்பு விலை, சரிந்து வர்த்­த­கம் ஆனது. ஐரோப்பா மற்­றும் அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­களின் சரிவு, இதில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.சீன நாட்­டின் பொரு­ளா­தார கார­ணி­கள், எதிர்­பார்த்­ததை விட குறை­வாக வந்­தது. இதன் கார­ண­மாக, அந்­நாட்­டின் தொழில் துறை வளர்ச்சி குறைந்து, செம்­பின் தேவை­யும் குறை­யும் என்ற கண்­ணோட்­டத்­தில், விலை சரிவு நிகழ்ந்­தது.

கடந்த நவம்­பர் மாதத்­தின் தொழில் துறை வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, சிறிய அள­வி­லான உயர்வை கண்­டி­ருந்­தது.இந்த ஆண்டை பொருத்­த­வரை, இது­வரை, 16 சத­வீ­தம் அள­வுக்கு விலை சரிந்­துள்­ளது. அமெ­ரிக்கா மற்­றும் சீனா இடையே நடந்த வர்த்­தக மோதல் கார­ண­மாக, பெரு­ம­ளவு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது

உலக அள­வில், அதி­க­மாக கனி­மங்­கள் மற்­றும் தொழிற்­சாலை மூல­தன பொருட்­களை உப­யோ­கிப்­ப­தில், சீனா முதல் இடத்­தில் உள்­ளது. ஆனால், வர்த்­தக மோதல் கார­ண­மாக, தேவை­களில் பாதிப்பு ஏற்­பட்டு வரு­கிறது. மேலும், அந்­நாட்­டின் ஏற்­று­ம­தி­யில் உரு­வா­கும் ஏற்ற இறக்­கங்­களும், கனி­மத்­தின் விலை­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.இத்­த­கைய கார­ணங்­க­ளால், செம்­பின் விலை­யில் பாதிப்பு ஏற்­பட்டு வரு­கிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)