தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு ... தமிழக இல்லத்தரசிகள் இருவருக்கு தொழில் துவங்க தலா ரூ.10 லட்சம் தமிழக இல்லத்தரசிகள் இருவருக்கு தொழில் துவங்க தலா ரூ.10 லட்சம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
23:34

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இரு வாரங்கள் மற்றும் ஒரு மாதம் தவிர்த்து, இதர குறுகியகால கடன்களுக்கு, எம்.சி.எல்.ஆர்., எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை, 0.10 சதவீதம் குறைத்துள்ளது.
இதன்படி, ஓராண்டு காலவரையுள்ள கடனுக்கான அடிப்படை வட்டி, 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது, இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு, முறையே, 8.80 சதவீதம் மற்றும் 8.90 சதவீதமாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆறு மாத கடனுக்கான வட்டி, 8.60 சதவீதத்தில் இருந்து, 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மூன்று மாதங்கள் காலவரை உள்ள கடன்களுக்கான வட்டி, 8.50 சதவீதத்தில் இருந்து, 8.45 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, ஒரு சில வங்கிகள், கடனுக்கான வட்டியை, 0.10 சதவீதம் குறைத்துள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)