எச்.டி.எப்.சி., வங்கி சந்தை மூலதனம் ரூ.6 லட்சம் கோடி தாண்டி சாதனை எச்.டி.எப்.சி., வங்கி சந்தை மூலதனம் ரூ.6 லட்சம் கோடி தாண்டி சாதனை ...  ரியல் எஸ்டேட் துறை – ஆர்.இ.ஐ.டி., ரியல் எஸ்டேட் துறை – ஆர்.இ.ஐ.டி., ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கார்டு இல்லாமல் பணம்: எஸ்.பி.ஐ., அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
23:21

சென்னை:ஏ.டி.எம்.,மில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும், ‘யோனோ கேஷ்’ என்ற புதிய சேவையை, எஸ்.பி.ஐ., எனும் பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.


இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஏ.டி.எம்.,மில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும், யோனோ கேஷ் என்ற புதிய திட்டம், நாடு முழுவதும் உள்ள, 16 ஆயிரத்து, 500 ஏ.டி.எம்.,களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய வங்கி துறையில், இந்த சேவை முதல் முறையாக, எஸ்.பி.ஐ., வங்கியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ இல்லாமல் பணம் எடுக்கும் இந்த முறையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன.இந்த சேவையை மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள், ‘யோனோ’ செயலியில், 6 இலக்க, யோனோ கேஷ் தனிநபர் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.


இதன் பிறகு, பணப் பரிவர்த்தனைக்கான அங்கீகாரமளிக்கும், 6 இலக்க எண், வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த, 6 இலக்க பரிவர்த்தனை அங்கீகார எண்ணை பெற்ற அடுத்த, 30 நிமிடங்களுக்குள், அருகிலுள்ள யோனோ கேஷ் பாயின்டில், பணம் எடுத்துக் கொள்ளலாம்.


இந்த வசதியால் வாடிக்கையாளர்களின் கார்டில் இருக்கும் தகவல்களை திருடுவது, குளோனிங் முறையில் போலி கார்டை உருவாக்குவது உள்ளிட்ட பிரச்னைகள் தவிர்க்கப் பட்டு விடும்.யோனோ கேஷ் என்ற புதிய சேவை, வாடிக்கையாளரின் வசதியை விரிவுபடுத்த வேண்டும், என்ற எங்கள் இலக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பி.எப்., உறுப்பினர்கள் தங்கள் தொகையை விலக்கி கொள்ளும் போது, பி.எப்., தொகை கணக்கீடு செய்யப்படும் விதம் தொடர்பான ... மேலும்
business news
அண்மை காலத்தில் பல வர்த்தக நிறுவனங்கள், என்.சி.டி., என குறிப்பிடப்படும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் ... மேலும்
business news
வரி சேமிப்பு திட்டமிடலை கடைசி நேரத்தில் மேற்கொள்ளும் போது, அவசரம் காரணமாக முதலீடு தேர்வு உள்ளிட்டவற்றில் ... மேலும்
business news
முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோருக்கு இருந்தாலும், அதை செயல்படுத்துவது என்று வரும் போது, ... மேலும்
business news
ரியல் எஸ்டேட் துறைக்கான மியூச்சுவல் பண்ட் என சொல்லப்படும், ஆர்.இ.ஐ.டி., முதலீடு பற்றி ஒரு கண்ணோட்டம்.ஆர்.இ.ஐ.டி., ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)