பதிவு செய்த நாள்
18 மார்2019
06:40
முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோருக்கு இருந்தாலும், அதை செயல்படுத்துவது என்று வரும் போது, பலவித தயக்கங்களும் தடைகளும் இருக்கின்றன. பலரும் நிதி திட்டமிடல் சிக்கலானது என கருதலாம். இந்த தயக்கங்களை வெல்ல, ‘வீடியோ கேம்’ வழி கைகொடுக்கிறது. அதாவது வீடியோகேம் போலவே நிதி திட்டமிடலை ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்வது:
அவசர கால நிதி:
இரண்டாவது கட்டம், எதிர்பாராத செலவுகள், சேமிப்பையும், முதலீட்டையும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதாகும். இதற்கு நெருக்கடியான நேரங்களில் கைகொடுக்க, ஆறு மாதம் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கூடிய அவசர கால நிதியை உருவாக்கி கொள்ள வேண்டும்.நீண்ட கால கவனம்: ஓய்வு காலம் போன்ற நீண்ட இலக்குகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும். சமபங்கு முதலீட்டில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், எஸ்.ஐ.பி., முறையிலான முதலீட்டை தேர்வு செய்யலாம். இப்படி ஒவ்வொரு கட்டமாக நிதி திட்டமிடலை வகுத்துக் கொள்ளலாம்.
நிதி இலக்குகள்:
இனி அடுத்த கட்டமாக நிதி இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். பொதுவாக நிதி இலக்குகளை அவற்றின் தன்மைக்கேற்ப குறுகிய கால இலக்கு, மத்திய கால இலக்கு மற்றும் நீண்ட கால இலக்கு என பிரிக்கலாம். இவற்றுக்கு ஏற்ப முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.செலவை குறையுங்கள்: முதல் கட்டம் மிக எளிதானது. வருமானத்தை விட செலவு குறைவாக இருக்க வேண்டும் என்பது தான் அது. வருமானத்திற்குள் செலவு அடங்கும் போது தான், சேமிக்க கையில் பணம் இருக்கும். எனவே முதல் சவால், செலவை மிச்சம் செய்து சேமிக்க வழி ஏற்படுத்திக்கொள்வது.
காப்பீடு தேவை:
நிதி திட்டமிடலில் காப்பீடு முக்கியம். போதுமான ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு இருப்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். டெர்ம் காப்பீடு ஏற்றதாக இருக்கும். காப்பீடு மூலம் பாதுகாப்பை உறுதி செய்வது மூன்றாவது கட்டமாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|