பதிவு செய்த நாள்
26 மார்2019
07:06

திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 46 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது; போக்குவரத்து செலவினங்களுடன் சேர்த்து, தமிழக நுாற்பாலைகளுக்கு, கேண்டி, 47 ஆயிரத்து, 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ அமைப்பு கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:ஜின்னிங் ஆலைகள்,பஞ்சு அரவையை நிறுத்தியுள்ளன. விவசாயிகள், வர்த்தகர்கள், பஞ்சு இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். இதனால், வரத்து குறைந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது.கடந்த, 20 நாட்களில், பஞ்சு விலை, 8 சதவீதம் உயர்ந்துள்ளது. பஞ்சு விலை உயர்வால், நுாற்பாலைகளின் உற்பத்தி செலவினம் கடுமையாக உயர்ந்துள்ளது.
பஞ்சு விலை உயர்வு, நுால் விலையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல், 1ம் தேதி, ஒசைரீ – பின்னலாடை நுால் விலையும் உயர்த்தப்படும். அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் நுால் ரகங்களை உற்பத்தி செய்வதை தவிர்த்து, நுாற்பாலை துறையினர், நெருக்கடியான சூழலை சமாளிக்க வேண்டும்.இவ்வாறு, பிரபு தாமோதரன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|