பதிவு செய்த நாள்
26 மார்2019
07:07

புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்.இது, வழக்கமாக, ரிசர்வ் வங்கி கவர்னர், நிதிக் கொள்கையை அறிவிக்கும் முன், மேற்கொள்ளும் ஆலோசனை தான் என, நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம், ஏப்., 2- – 4 வரை நடைபெறுகிறது. ஏப்., 4ம் தேதி, கொள்கை அறிவிப்பு வெளியாகும்.கடந்த பிப்ரவரியில், இக்குழு, வங்கிகளின், ‘ரெப்போ’ வட்டி, 6.50 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக குறைத்தது. ஆனால், வங்கிகள், 0.10 சதவீதம் வரை தான், பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைத்தன.இது குறித்து, இம்மாத துவக்கத்தில், சக்திகாந்த தாஸ், வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நாட்டின் சில்லரை பணவீக்கம், நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரியில், 2.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், இது, ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு குறைவாக உள்ளதால், ரெப்போ வட்டி மீண்டும் குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|