பதிவு செய்த நாள்
26 மார்2019
11:06

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளான நேற்று(மார்ச் 25) கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று(மார்ச் 26) சரிவிலிருந்து மீண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.38 புள்ளிகள் உயர்ந்து 37,886.29ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 35.50 புள்ளிகள் உயர்ந்து 11,389.75ஆகவும் வர்த்தகமாகின.
கச்சா எண்ணெய், எரிவாயு, வங்கி, உலோகம் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.68.81ஆக வர்த்தகமானது. பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|