பதிவு செய்த நாள்
27 மார்2019
07:06

புதுடில்லி: ‘‘போதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலையில், நாட்டின் பொருளாதாரம், 7 சதவீதம் வளர்ச்சி காண்பதாக கூறப்படுவது சந்தேகம் அளிக்கிறது,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள், கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய, ரகுராம் ராஜன், தனியார் ‘டிவி’க்கு அளித்த பேட்டி:இந்திய பொருளாதாரம் குறித்த தற்போதைய புள்ளிவிபரங்கள் எனக்கு பிடிபடவில்லை. அதனால், நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அறிய, சீரமைப்பு நடவடிக்கை தேவை.மத்திய அமைச்சர் ஒருவர், ‘போதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என கூறப்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு, 7 சதவீத வளர்ச்சி காண முடியும்?’ என, என்னிடம் கேட்டார்.
அதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அறிவித்தபடி இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.பொருளாதார வளர்ச்சி குறித்த ஐயங்களை தீர்க்கவும், உண்மையான வளர்ச்சியை அறியவும், அதிகாரம் மிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும்.இக்குழு, அனைத்து புள்ளிவிபரங்களையும் ஆராய்ந்து, நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|