தங்கம் விலை ரூ.120 சரிவுதங்கம் விலை ரூ.120 சரிவு ... ஆன்லைனுக்கு மாறும் வணிகவரி துறை ஆன்லைனுக்கு மாறும் வணிகவரி துறை ...
‘மோரிஸ் கேரேஜஸ்’ துாதரானார் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2019
00:10

புதுடில்லி: ‘மோரிஸ் கேரேஜஸ் இந்தியா’ நிறுவனத்தின் விளம்பர துாதராக, பிரிட்டன் நடிகர்,பெனடிக்ட் கம்பர்பேட்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த, மோரிஸ் கேரேஜஸ்நிறுவனம், ‘எம்.ஜி., மின்ஜெட்ஸ்’ உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற கார்களை தயாரித்து வருகிறது.

அறிமுகம்:
இதன் துணை நிறுவனமான, மோரிஸ் கேரேஜஸ் இந்தியா, குஜராத், ஹாலோல் தொழிற்சாலையில், எம்.ஜி., கார்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் முதன் முதலாக, ‘எம்.ஜி., ஹெக்டர்’ என்ற காரை, விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதையொட்டி, விளம்பர துாதராக, நடிகர், பெனடிக்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, எம்.ஜி., இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராஜீவ் சாபா கூறியதாவது: பிரிட்டன் மக்களால் பெரிதும் விரும்பப்படும், பெனடிக்ட் கம்பர்பேட்சுக்கும், மோரிஸ் கேரேஜஸ் நிறுவனத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு.நாடகம், திரைப்படம், ‘டிவி’ தொடர்களில், பலவித பரிமாணங்களை வெளிப்படுத்தி, மக்களின் அபிமானத்தை பெனடிக்ட் பெற்றுள்ளார்.

மகிழ்ச்சி:
அதுபோல, மோரிஸ் கேரேஜஸ் நிறுவனமும், 1924 முதல், புதிய உத்திகளில், பல வகையான கார்களை தயாரித்து, உலகப் புகழ் பெற்றுள்ளது. பெனடிக்ட், விளம்பர துாதராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)