பதிவு செய்த நாள்
01 ஏப்2019
06:58
முதலீடு செய்வதன் அவசியத்தை உணர்ந்தவர்களில் எல்லாருமே, அதை செயல்படுத்துவதில்லை. பெரும்பாலானோர் முதலீடு செய்வதை பல காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். முதலீடு முடிவை செயல்படுத்த தடையாக இருக்கும் பொதுவாக காரணங்களையும், அவற்றை வெல்லும் வழிகளையும் பார்க்கலாம்:
ரிஸ்க் அதிகம்:
முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும் என்பதோடு, முதலீடு செய்வதில் ரிஸ்கும் உண்டு. பலரும் முதலீடு அதிக ரிஸ்க் கொண்டது, என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என நினைக்கலாம். இதன் காரணமாகவே முதலீட்டை தள்ளிப்போடலாம். முதலீட்டில் ரிஸ்க் உண்டு என்றாலும், பரவலாக்க உத்தி மூலம் ரிஸ்கை பெருமளவு குறைக்கலாம்.பு
த்திசாலித்தனம் இல்லை:
முதலீடு மூலம் அதிக பலன் பெறுவதற்கு தேவையான புத்திசாலித்தனம் இல்லை என, சிலர் நினைக்கலாம். குறிப்பாக சமபங்கு சார்ந்த முதலீட்டை மனதில் வைத்து இவ்வாறு கூறலாம். ஆனால், முதலீடுகள் சந்தையை மிஞ்சும் பலன் தர வேண்டும் என்றில்லை. அவை இலக்குகளுக்கு ஏற்ற பலன் அளிப்பதே முக்கியம்.நேரமின்மை: இன்னும் சிலர் முதலீடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு, சரியான முதலீடு எடுக்க போதுமான நேரம் தங்களிடம் இல்லை என நினைக்கலாம். முதலீடு தொடர்பாக முறையான ஆய்வு அவசியம் என்றாலும், அதற்காக முதலீட்டாளரே இதை செய்ய வேண்டும் என்றில்லை. நிதி ஆலோசகர் உதவியை நாடலாம்.
பணம் இல்லை:
முதலீடு செய்யும் அளவுக்கு பணக்காரர் இல்லை என்று பலர் கருதலாம். ஆனால், அதிக பணம் இருந்தால் தான் முதலீடு செய்ய முடியும் என்பது தவறான எண்ணமாகும். எல்லாருக்கும் முதலீடு அவசியம். ஒவ்வொருவரும் முடிந்த தொகையை முதலீடு செய்ய வேண்டும்.அவசரம் என்ன? முதலீடு செய்ய இப்போது அவசரம் இல்லை, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சிலர் நினைக்கலாம். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் இவ்வாறு நினைக்கலாம். இதற்கு மாறாக, இளம் வயதில் முதலீட்டை துவக்குவதே மிகச்சிறந்ததாகும். அப்போது தான் கூட்டு வட்டியின் முழு பலனை பெற முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|