தேர்­த­லும் பொதுத் துறை பங்­கு­களும்தேர்­த­லும் பொதுத் துறை பங்­கு­களும் ...  மீண்டும் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.06 லட்சம் கோடியானது மீண்டும் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.06 லட்சம் கோடியானது ...
முறை­யான திட்­டமே முன்­னேற்­றத்­துக்கு வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
07:15

இன்று முதல், புதிய நிதி­யாண்டு துவங்­கு­கிறது. உங்­க­ளு­டைய வரி­க­ளைத் திட்­ட­மிட சரி­யான தரு­ணம்.

என்­ன­வெல்­லாம் நாம் கவ­னத்­தில் வைத்­துக்­கொள்ள வேண்­டும்? இந்த நிதி­யாண்டு கொஞ்­சம் வித்­தி­யா­ச­மா­னது. ஒவ்­வொரு முறை­யும் எவ்­வ­ளவு சம்­பா­தித்­தா­லும், கையில் நிகர இருப்பு ஏதும் இல்லை; எல்­லா­வற்­றை­யும் வரி என்ற பெய­ரில் அரசே அள்­ளிக் கொள்­கிறது என்ற வருத்­தம் உண்டு.அந்­தக் குறை, அர­சின் காது­களில் விழுந்து கொண்டு தான் இருந்­தது. அதைத் தீர்ப்­ப­தற்­கான தேவை ஏற்­ப­ட­வில்லை. இது தேர்­தல் ஆண்டு. கூடு­தல் சலு­கை­களை மக்­க­ளுக்கு வழங்கி, திருப்தி செய்ய வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது.

அதன் பல­னைத் தான், இடைக்­கால பட்­ஜெட்­டில் பார்த்­தோம். அவை­யெல்­லாம் இன்று முதல் அம­லுக்கு வரு­கின்றன. முறை­யாக திட்­ட­மிட்டு, சரி­யான சேமிப்­பு­க­ளை­யும், இதர பிடித்­தங்­க­ளை­யும் ஒழுங்­கு­ப­டுத்­தி­னால், கையில் கொஞ்­சம் காசு நிற்­கும்.வரு­வாய், 5 லட்­சம் ரூபாய் வரை உள்­ள­வர்­க­ளுக்கு, இந்த ஆண்டு வரு­மான வரி தள்­ளு­படி கிடைக்­கும். அதா­வது நீங்­கள், 9.25 லட்­சம் வரை சம்­ப­ளம் வாங்­கி­னால் கூட, கொடுக்­கப்­பட்­டி­ருக்­கும் பல்­வேறு சலு­கை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னால், உங்­க­ளு­டைய வரி பிடித்­தம் செய்­யப்­ப­டு­வ­தற்­கான வரு­வாய், 5 லட்­சம் ரூபாய் தான் வரும்.

அந்த நிலை­யில், நீங்­கள் வரு­மான வரி செலுத்த வேண்­டி­யது இல்லை. இன்­னொரு நல்ல முன்­னேற்­றம், நிரந்­த­ரக் கழிவு. முன்­னர், 40 ஆயி­ரம் ரூபா­யாக இருந்த உச்ச வரம்பு, தற்­போது, 50 ஆயி­ர­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இத­னால் ஆண்­டுக்கு, 3,120 வரை வரி சேமிப்பு கிடைக்­கும்.மூத்த குடி­மக்­கள், பெண்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்­கும் மிகப்­பெ­ரிய பலன், டி.டி.எஸ்., எனும் வரு­மான வரி பிடித்­தத்­தில் செய்­யப்­பட்­டுள்ள மாறு­தல். வங்­கி­களில் செய்­தி­ருக்­கும் சேமிப்­பு­க­ளுக்­குக் கிடைக்­கும் வட்டி, 10 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் இருக்­கு­மா­னால், வரி பிடித்­தம் செய்­யப்­படும். பிடித்­தம் செய்­யா­மல் இருக்க, படி­வம் – 15ஜியை வழங்க வேண்­டும். பெரும்­பா­லும் இதை மறந்து விடு­வர்.

தேவை இல்­லா­மல் பல­ருக்­கும் வரி பிடித்­தம் செய்­யப்­பட்­டி­ருக்­கும். ஒரு சில வங்­கி­கள் தான், வாடிக்­கை­யா­ளர்­களை ஞாப­கப்­ப­டுத்தி, படி­வம் – 15ஜியை வாங்­கு­வர். தற்­போது வட்­டிக்­கான அளவு, 10 ஆயி­ரத்­தில் இருந்து, 40 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. அதா­வது, நீங்­கள் செய்­துள்ள சேமிப்­பு­களில் இருந்து, 40 ஆயி­ரம் ரூபாய் வரை வட்டி வரு­வாய் வந்­தா­லும், டி.டி.எஸ்., கட்­டத் தேவை­யில்லை. இன்­னொரு நல்ல முன்­னேற்­றம், இரண்­டாம் வீடு வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்டு உள்­ளது. முதல் வீட்­டில் இருந்து கொண்டு, இரண்­டாம் வீட்டை வாட­கைக்கு விடு­வர். ஆனால், கடந்த சில ஆண்­டு­க­ளாக, பல இடங்­களில் வீட்­டுக்கு வாட­கைக்­குக் கூட ஆட்­கள் வர­மாட்­டேன் என்­கின்­ற­னர். ஆனா­லும், வீட்­டில் இருந்து வரு­வாய் வந்­தா­லும், வரா­விட்­டா­லும், ஒரு நோஷ­னல் வாடகை என்­பது கணக்­கி­டப்­பட்டு, அதற்­கும் வரி செலுத்த வேண்டி இருந்­தது. இம்­முறை, இப்­படி காலி­யாக இருக்­கும் இரண்­டாம் வீட்­டுக்கு நோஷ­னல் வாடகை மீதான வரி கிடை­யாது.

இன்­னும் இரண்டு முக்­கி­ய­மான முன்­னேற்­றங்­கள் ஏற்­பட்­டுள்ளன. ஒன்று, கட்­டு­மா­னத்­தில் இருக்­கும் கட்­ட­டங்­களின் மீதான சரக்கு மற்­றும் சேவைக் கட்­ட­ணம் வித்­தி­யா­சப்­ப­டப் போகிறது. அதா­வது, உங்­கள் பில்­டர் உள்­ளீட்டு வரியை எடுத்­துக் கொள்­ளக்­கூ­டி­ய­வ­ராக இருந்­தால், புதிய கட்­ட­டங்­க­ளுக்கு, 12 சத­வீத, ஜி.எஸ்.டி., வசூ­லிக்­கப்­படும். அதே உள்­ளீட்டு வரியை கோரா­மல் இருந்­தால், வீடு வாங்­கும் உங்­க­ளி­டம், 5 சத­வீத, ஜி.எஸ்.டி., வரியை வசூ­லித்­தால் போதும். அத­னால், எப்­ப­டிப்­பட்ட வரி பிடித்­தம் செய்­கி­றார் என்­ப­தைப் புரிந்து கொண்டு, இந்த நிதி­யாண்­டில் வீடு­கள் வாங்­குங்­கள்.

இரண்டு, வட்டி விகி­தங்­கள் தொடர்­பா­னது. வீட்­டுக் கடன், வாக­னக் கடன், தனி­ந­பர் கடன் வாங்­கும் போது, விதிக்­கப்­படும் வட்டி விகி­தம், ஒவ்­வொரு வங்­கி­யைப் பொறுத்து அமைந்­தி­ருந்­தது. அவற்­றுக்­கெல்­லாம் ஒரு வெளிப்­ப­டை­யான அடிப்­படை அல­கைக் கொண்டு நிர்­ண­யம் செய்­யப்­பட வேண்­டும் என, ஆர்.பி.ஐ., சென்ற டிசம்­ப­ரில் தெரி­வித்­தது. இதை, இன்று முதல் அனைத்து வங்­கி­களும் அமல்­ப­டுத்த வேண்­டும் என்­றும் தெரி­வித்­தது.

எஸ்.பி.ஐ., வங்கி மட்­டும், ரெப்போ வட்டி விகி­தத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு, சேமிப்­பு­களும், கடன்­க­ளுக்­கு­மான வட்டி விகி­தங்­களை நிர்­ண­யித்து அறி­வித்­துள்­ளது. பிற வங்­கி­களும் இந்த நடை­மு­றைக்கு விரை­வில் வரும் என, எதிர்­பார்க்­க­லாம். இதன் மூலம், பெரிய பலன், கடன் வாங்­கு­வோ­ருக்­குத் தான். ரெப்போ விகி­தம் எப்­போ­தெல்­லாம் குறை­கி­றதோ, அதன் பலன் வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் போய் சேரும். மேலும், ஒவ்­வொரு முறை அடிப்­படை வட்டி விகி­தங்­களை, ஆர்.பி.ஐ., மாற்றி அமைக்­கும் போதும், அது இந்த நாட்­டின் பல கோடி பேரின் வாழ்க்­கை­யைப் பாதிக்­கப் போகிறது என்­பதை உணர்ந்து கொண்டு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும்.

இந்த ஆண்டு நடக்க இருக்­கும் மற்­றொரு விஷ­யம் தான், நம் கவ­னத்­தைக் கவர்­கிறது. அதா­வது, ‘புரா­ஜக்ட் இன்­சைட்’ என்­றொரு திட்­டத்தை, வரு­மான வரித்­துறை இந்த ஆண்டு முதல் அமல்­ப­டுத்த இருக்­கிறது.இது, தொழில்­நுட்­பம் சார்ந்­தது. பல ஆண்டு கால உழைப்­பில், 1,000 கோடி ரூபாய் செல­வில் இந்த மிக விரி­வான தக­வல் சேமிப்பு ஆய்­வுத் தளம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­குப் பின்­ன­ணி­யில் இருக்­கும் தொழில்­நுட்­பத்­தின் பெயர், ‘பிக் டேட்டா’ எனப்­ப­டு­வது. அதா­வது நீங்­கள் என்ன விப­ரங்­க­ளைப் பகிர்ந்து கொண்­டா­லும், அது திரட்­டப்­படும். உதா­ர­ண­மாக, உங்­கள் வெளி­நாட்­டுப் பயண புகைப்­ப­டங்­களை முக­நுா­லில் பகிர்ந்து கொண்­டி­ருக்­க­லாம். புதிய காரோ, நகையோ வாங்­கி­யி­ருக்­க­லாம். பெரிய தொகை ஒன்றை ஒரு­வ­ருக்கு டிரான்ஸ்­பர் செய்­தி­ருக்­க­லாம்.

இவை­யெல்­லாம் உங்­கள் கணக்­கில் வரவு வைக்­கப்­படும். இனி­மேல் உங்­கள் வரு­மா­னம் என்­பது, உங்­க­ளுக்கு மட்­டுமே தெரிந்த ரக­சி­ய­மல்ல. வரி ஏய்ப்­போ­ரைக் கண்­டு­பி­டித்து, அவர்­க­ளி­டம் இருந்து முறை­யாக கணக்கு வழக்­கு­க­ளைப் பெற, இந்­தத் திட்­டம் உத­வப் போகிறது.அரசு கொடுக்­கும் நியா­ய­மான வாய்ப்­பு­க­ளைப் பயன்ப­டுத்­திக் கொண்டு, கொஞ்­ச­மே­னும் சேமிப்­பு­களை உயர்த்­திக் கொள்­ள­லாமே!

–ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)