முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைவு முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைவு ... வீட்­டுக்­க­டனை மாற்­றும் முன்  கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் வீட்­டுக்­க­டனை மாற்­றும் முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் ...
‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இந்தியாவை பாதிக்காது:ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2019
23:41

புதுடில்லி:பிரிட்டனின்,‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தால், ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்டவற்றுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது.


டில்லியில், ‘பி.எச்.டி., வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், இந்தியாவுக்கான, ஐரோப்பிய கூட்டமைப்பின் துாதர், டோமாஸ் கோஸ்லொவ்ஸ்கி பேசியதாவது:பிரிட்டன், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தின் கீழ்,28 நாடுகள் அடங்கிய, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, வெளியேறுகிறது.


இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில், இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தகம், முதலீடு, வணிக ஒப்பந்தங்கள் போன்றவற்றுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது.


தாராள வர்த்தகம்


இந்தியாவும், ஐரோப்பிய கூட்டமைப்பும், தாராள வர்த்தக ஒப்பந்தம், முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை தொடர்பான முடிவை, விரைந்து எடுக்க வேண்டும். அது, இரு தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.இந்தியாவும், ஐரோப்பிய நாடுகளும்,வர்த்தக வசதி வாய்ப்புகளை மேம்படுத்தி, வரியினங்களை குறைத்தால், பரஸ்பர வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும்.


கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையிலான, பரஸ்பர வர்த்தகம், 14 ஆயிரத்து, 100 கோடி டாலராக இருந்தது. இது, தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், 2022ல், 20 ஆயிரம் கோடி டாலராக உயர வாய்ப்புள்ளது.


ஐரோப்பிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் வணிக சீர்திருத்தங்கள், வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், இந்தியாவுக்கு பயன் அளிக்கும்.இது, இந்தியாவில் தயாரிப்போம் என்ற முழக்கத்தை உள்ளடக்கியதாகும். அதேசமயம், உலகிற்காக தயாரிப்போம் என்ற வகையில், சிறந்தோங்க வழிவகை செய்வது அவசியம்.சர்வதேச பொருளாதார விதிகளின் அடிப்படையில், வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு, இந்தியாவும், ஐரோப்பிய கூட்டமைப்பும், நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.


குறிப்பாக, ‘ஜி–20’ மற்றும் உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து செயல்பட்டு, சர்வதேச பொருளாதார விதிமுறைகளின் புதிய வடிவமைப்பிற்கும், மறுகட்டமைப்பிற்கும் வழிகோல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


ரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன், இந்தியா மிகச் சிறந்த முறையில் பரஸ்பர வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தப்படி, மே,22ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர், தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘கெடு’வை, ஜூன்,30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, கோரியுள்ளார்.


அதன்படி, பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினாலும், அதனால் இந்திய பொருளாதாரமோ அல்லது வர்த்தக உறவோ சிறிதும் பாதிக்கப்படாது. எந்தவித தாக்கமும் ஏற்படாது.

அஞ்சு குமார், இணை செயலர் (மத்திய ஐரோப்பா),


மத்திய வெளியுறவு அமைச்சகம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)