ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முன்னாள், சி.இ.ஓ., கைதுபோலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முன்னாள், சி.இ.ஓ., கைதுபோலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி ... மத்திய அரசுக்கு பெரிய தலைவலி மத்திய அரசுக்கு பெரிய தலைவலி ...
விடு­முறை பயண கடன் வச­தி­யில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
23:50

கோடை விடு­முறை பய­ணங்­களை மேற்­கொள்­ளும் போது தேவை­யான திட்­ட­மி­ட­லில், நிதி வச­தி­யை­யும் முக்­கி­ய­மாக கருத வேண்­டும். இத்­த­கைய பய­ணத்­திற்­காக ஏற்­க­னவே திட்­ட­மிட்டு சேமித்­தி­ருக்­க­வில்லை எனில், விடு­முறை கால கடன் ­வ­ச­தியை நாட­லாம். வங்­கி­கள் மற்­றும் நிதி நுட்ப நிறு­வ­னங்­கள் இத்­த­கைய கடன்­களை அளிக்­கின்­றன. இந்த வச­தியை நாடும் போது மன­தில் கொள்ள வேண்­டிய அம்­சங்­கள்:

தேவை­யான அளவு கடன்:


பொது­வாக, வாழ்­வி­யல் கார­ணங்­க­ளுக்­கான கடன் வச­தியை நாடா­மல் இருப்­பதே நல்­லது. எனி­னும் தவிர்க்க இய­லாத சூழ­லில், விடு­முறை பய­ணத்­திற்­கான கடன் வச­தியை பெறும் நிலை இருந்­தால், தேவை­யான அளவு மட்­டுமே கடன் வாங்க வேண்­டும். மற்ற கடன்­க­ளோடு சேர்த்து மாதத்­த­வணை சம்­ப­ளத்­தில், 50 சத­வீ­தத்­திற்கு மிகா­மல் இருக்க வேண்­டும்.


கட­னுக்­கான கால அளவு:


விடு­முறை பய­ணத்­திற்­காக, முத­லீட்­டில் கை வைப்­ப­தை­விட கடன் வச­தியை நாடு­வது
ஏற்­றது தான். ஆனால், கட­னுக்­கான கால அளவை சரி­யாக தேர்வு செய்ய வேண்­டும். குறு­கிய காலம் எனில் வட்டி அதி­கம் இருக்­க­லாம். ஆனால், திரும்ப செலுத்­தும் தொகை குறை­வாக இருக்­க­லாம்.


கடன் நிபந்­த­னை­கள்:



கடனை திரும்பி செலுத்­து­வது தொடர்­பான விதி­மு­றை­கள் மற்­றும் நிபந்­த­னை­களை
கவ­னிக்க வேண்­டும். இவற்­றில் சாத­க­மான அம்­சங்­களை கொண்ட வங்­கியை தேர்வு செய்ய வேண்­டும். ஒரு சில வங்­கி­கள் முன்­கூட்­டியே பணம் செலுத்­து­வ­தற்கு அப­ரா­தம் விதிக்­க­லாம்.


செலவு கணக்கு:



விடு­மு­றைக்­கான தொகை கிடைத்­து­விட்­ட­தால் இஷ்­டம் போல செலவு செய்­யக்­கூ­டாது. பய­ணத்­திற்கு என்று தெளி­வான செலவு பட்­ஜெட்டை வகுத்­துக்­கொள்ள வேண்­டும். அது அனைத்து செல­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கி­யி­ருக்க வேண்­டும். இந்த பட்­ஜெட்டை மீறா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.


காப்­பீடு அவ­சி­யம்:


விடு­மு­றைக்­கான காப்­பீடு வசதி இப்­போது மெல்ல பிர­ப­ல­மாகி வரு­கிறது. உங்­கள் பய­ணத்­திற்கு பொருத்­த­மான பயண காப்­பீடு எடுத்­துக்­கொண்­டால், எதிர்­பா­ராத நெருக்­க­டி­கள் குறித்து கவலை இல்­லா­மல் இருக்­க­லாம். குறிப்­பாக, வெளி­நாட்டு பய­ணம் எனில் இது மிக­வும் அவ­சி­யம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி: அம­ரிக்­கா­வுக்­கும், சீனா­வுக்­கும் இடையே நடை­பெற்று வரும் வர்த்­த­கப் போர், இந்­தி­யா­வின் ... மேலும்
business news
புது­டில்லி: அடுத்த இரண்டு ஆண்­டு­களில், இந்­தி­யா­வில் உள்ள குடும்ப வணிக நிறு­வ­னங்­களில், 89 சத­வீத ... மேலும்
business news
புது­டில்லி: தலை­ந­கர் டில்­லி­யில், நேற்று,10 கிராம் தங்­கத்­தின் விலை, 100 ரூபாய் குறைந்து, 33 ஆயி­ரத்து, 620 ரூபா­யாக ... மேலும்
business news
புது­டில்லி: மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், அவற்­றின் துணை நிறு­வ­னங்­களை இணைக்­கும் முயற்­சிக்­குள் இறங்க ... மேலும்
business news
புது­டில்லி: சகாய விலை வீடு திட்டங்­களில், கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, நிலம் வாங்க, வங்­கி­கள் நிதி­யு­தவி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)