கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ... கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
00:08

கமாடிட்டி சந்தை

கச்சா எண்ணெய்


சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, தொடர்ந்து ஐந்­தா­வது வார­மாக உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது. இருப்­பி­னும், கடந்த வாரம் விலை ஏற்­றம் சிறி­த­ளவு கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது. இதை­ய­டுத்து, 1 பேரல் கச்சா எண்­ணெய் விலை, 63 முதல், 65 அமெ­ரிக்க டாலர் என்ற அள­வில், சீராக வர்த்­த­கம் நடை­பெற்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


கடந்த ஆண்­டின் கடைசி மூன்று மாதங்­க­ளான, அக்­டோ­பர் முதல், டிசம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், கச்சா எண்­ணெய் விலை, தொடர் சரிவை சந்­தித்­தது. இருப்­பி­னும், இந்த ஆண்டு ஆரம்­பம் முதல், தற்­போது வரை, தொடர்ந்து நான்கு மாதங்­க­ளாக விலை உயர்ந்து வரு­கிறது.


ஜன­வரி மாதம், 1 பேரல் விலை, 42 அமெ­ரிக்க டால­ராக இருந்­தது; தற்­போது, 64 டாலர் என்ற நிலை­யில் வர்த்­த­க­மாகி வரு­கிறது. ஈரான் மற்­றும் வெனி­சுலா நாடு­கள் மீது, அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள பொரு­ளா­தார தடை கார­ண­மாக, கச்சா எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­மதி கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது.


மேலும், லிபியா நாட்­டின் உற்­பத்­தி­யும் பாதிக்­கப்­பட்டு, அதன் கார­ண­மா­க­வும் சந்­தை­யில் எண்­ணெய் தட்­டுப்­பாடு நில­வும் என்ற அச்­சத்­தில், விலை உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது.
வெனி­சுலா நாட்­டின் தின­சரி உற்­பத்தி, 2 லட்­சத்து, 70 ஆயி­ரம் பேரல்­கள் குறைந்து, மார்ச் மாதத்­தில், மொத்த தின­சரி உற்­பத்தி, 7 லட்­சத்து, 32 ஆயி­ரம் பேரல்­க­ளாக ஆனது. மேலும், ஈரான் நாட்­டின் உற்­பத்தி, 27 லட்­சம் பேரல்­கள் என்ற நிலை­யில் உள்­ளது.


வளை­குடா எண்­ணெய் உற்­பத்தி நாடு­கள் மற்றும் ரஷ்யா ஆகி­யவை இணைந்து, 2019, ஆண்­டின் முதல் ஆறு மாத காலத்­துக்கு, உற்­பத்­தியை குறைத்து, விலையை அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டன. இதன்­படி, உல­கின் மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான, சவுதி அரே­பி­யா­வும் உற்­பத்­தியை குறைத்­துள்­ளது.


இத்­து­டன், வெனி­சுலா மீதான தடை­யும் சேர்ந்து கொள்ள, விலை அதி­க­ரித்­துள்­ளது. மேலும், வர்த்­தக மோதல் குறித்து, அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளின் தலை­வர்­கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வரு­கின்­ற­னர். இதில் சுமூ­க­மான உடன்­படிக்கை ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


அப்­படி நிகழ்ந்தால், பொரு­ளா­தார வளர்ச்சி மீண்டும் பழைய நிலைக்­குத் திரும்­பும். இதன் கார­ண­மாக, தொழிற்­சாலை தேவை மற்­றும் கச்சா எண்­ணெய் தேவை உய­ரும் என்ற எதிர்­பார்ப்பு உள்­ளது. இதன் காரண­மா­கவும் விலை அதி­க­ரித்­துள்­ளது.


தங்கம் வெள்ளி


கடந்த வாரம் தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை அதி­க­ரித்து வர்த்­த­கம் ஆனது. இருப்­பி­னும், வார இறு­தி­யில், வியா­ழன் அன்று கடும் சரிவை சந்­தித்­தது. பின்பு வெள்ளி அன்று சிறி­த­ளவு மீண்டு, வர்த்­த­கம் முடி­வுற்­றது. தங்­கம், வெள்ளி ஆகி­யவை தொடர்ந்து மூன்­றா­வது வார­மாக விலை சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­வது குறிப்பிடத்­தக்­கது.


பங்­குச் சந்­தை­கள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ­லில், முத­லீட்­டா­ளர்­கள் தங்­கம் மீது மூத­லீடு செய்­வது குறைந்­துள்­ளது. இது­வும் விலை சரி­விற்கு ஒரு கார­ண­மா­கும்.வாரந்­தோ­றும் வியா­ழன் அன்று வெளி­வ­ரும், அமெ­ரிக்­கா­வில் வேலை இல்­லா­தோ­ருக்­கான ஊக்க தொகை குறித்த புள்ளி விப­ரம், அந்­நாட்­டின் உற்­பத்தி துறை குறி­யீடு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், டாலர் இண்­டெக்ஸ் அதி­க­ரித்­தது. இதை­ய­டுத்து, தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, கடந்த வியாழனன்று கடும் சரி­வினை சந்­தித்­தது.


நடப்பு ஆண்­டில் உலக பொரு­ளா­தா­ரம் முந்­தைய கணிப்­பான, 3.5 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 3.3 சத­வீ­த­மாக குறையும் என பன்­னாட்டு நிதி­யம் தெரி­வித்­துள்­ளது.இதில், அமெ­ரிக்க பொரு­ளா­தார வளர்ச்சி, 2.5 சதவீதத்­தி­லி­ருந்து, 2.3 சத­வீ­த­மாக குறை­யும் என­வும் தெரி­வித்துள்­ளது. இதை­ய­டுத்து பொரு­ளா­தார வளர்ச்சி குறையும் என்ற கோணத்­தில், முத­லீட்­டா­ளர்­கள் தங்­கம் மற்­றும் வெள்­ளி­யில் முத­லீட்­டினை அதி­க­ரித்­த­னர். இதன் கார­ண­மாக, வார இறுதி நாளில் தங்­கம், வெள்ளி விலை உயர்ந்தது.


வரும் நாட்­க­ளி­லும், இது விலைக்கு சாத­க­மாக அமை­யும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தங்­கம் மட்­டு­மின்றி பிளாட்­டி­னத்­தின் விலை­யும் தொடர்ந்து, ஐந்­தா­வது வார­மாக உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது. உற்­பத்தி குறைவு மற்­றும் தொழில்­துறை தேவை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக, விலை தொடர்ந்து உயர்ந்த வண்­ணம் உள்­ளது.



அமெ­ரிக்­கா­வில், நடப்பு ஆண்­டில் மூன்று முறை­யும், அடுத்த ஆண்­டில் ஒரு முறை­யும் வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் என்று ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், கடந்த ஆண்டு இறு­தி­யில் வெளி­வந்த பொரு­ளா­தார கார­ணி­கள் மற்­றும் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் ஏற்­பட்ட சந்­தே­கங்­கள் கார­ண­மாக, வட்டி விகி­தத்தை உயர்த்த வாய்ப்­பு­கள் குறைவு என்ற கண்­ணோட்­டம் எழுந்­தது. இந்த கண்­ணோட்­டத்­தி­னால் தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, ஜன­வரி முதல் தற்­போது வரை உயர்ந்து வந்­தது.



ஆனால், அண்­மை­யில் வெளி­வந்த சுற்­ற­றிக்­கை­யில், நடப்­பாண்­டில் ஒரு முறை வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட­லாம் என்ற சூழ்­நிலை உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு இருந்­த­தால், விலை சரிவு நிகழ்ந்­தது.பொது­வாக, வட்டி விகி­த­மும் தங்­க­மும் எதிர்­ம­றை­யான போக்­கினை கொண்­டவை. வட்டி விகி­தம் உய­ரும்­போது, அரசு மற்­றும் அரசு சார்ந்த முத­லீ­டு­களில் ஆதா­யம் அதி­க­ரிக்­கும் என்­ப­தால், முத­லீட்­டா­ளர்­கள் அவற்­றில் முத­லீட்டை அதி­க­ரிப்­பார்­கள். மாறாக, வட்டி விகி­தம் குறை­யும்­போது, அதிக லாப­மீட்­டும் பொருட்­கள் மீது முத­லீடு செய்­வர். இவற்­றில், தங்­கத்­தின் மீதான முத­லீடு முத­லி­டம் வகிக்­கிறது.



செம்பு



செம்பு விலை­யா­னது, முந்­தைய வாரத்­து­டன் ஒப்­பிடும் ­போது, கடந்த வாரம் விலை உயர்ந்து வர்த்­த­கம் ஆன போதி­லும், வார இறுதி நாட்­களில் சற்று சரிந்து வர்த்­த­கம் நடை­பெற்­றது.
பங்­குச் சந்­தை­கள் உயர்வு, விலைக்கு சாத­க­மாக அமைந்த போதி­லும், கடந்த வியா­ழன் அன்று வெளியான சீனா­வின் தொழில் துறை உற்­பத்தி குறி­யீடு வளர்ச்சி பாத­க­மாக அமைந்­து­விட்­டது.


சீனா­வின் தொழில் துறை வளர்ச்சி குறி­யீடு, இவ்­வாண்டு தொடக்­கம் முதல் சரிந்­து­வ­ரும் சூழ­லால், விலை ஏற்­றம் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது. உலக அள­வில் செம்பை அதி­கம் பயன்­ப­டுத்­து­வ­தில், சீனா முன்­ன­ணி­யில் உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நாட்டின் தேவை மற்­றும் நுகர்வு செம்பு விலை­யில் குறிப்­பிடத்­தக்க பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.
லண்­டன் பொருள் வாணிப சந்­தை­யில், செம்பு இருப்­பா­னது, கடந்த வாரம், 34,900 டன் அதி­க­ரித்­துள்­ளது. மொத்த இருப்பு, 66,325 டன்­க­ளா­கும்.


அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே வர்த்­தக மோதல் குறித்து நடை­பெற்று வரும் பேச்­சில், சுமூக முடிவு ஏற்­படும் என்ற எதிர்­பார்ப்பு உள்­ளது. அப்­படி ஏற்­பட்­டால், சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யும் ,தொழிற்­சாலை தேவை­யும் அதி­க­ரிக்­கும். இந்த எதிர்­பார்ப்­பி­னாலும் செம்பு விலை ஏற்­றம் கண்­டது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)