பதிவு செய்த நாள்
22 ஏப்2019
00:04
உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிப்பது மற்றும், ‘லாக்’ செய்வது போன்றவற்றை பாதுகாப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளலாம்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் விஷமிகள் கைவரிசையால் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. இதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, ஒவ்வொரு முறை கார்டை பயன்படுத்தும் போதும், அதற்கான வரம்பை, 5,000 அல்லது 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கலாம்.இந்த வரம்பிற்கு அதிகமானால், பரிவர்த்தனை தோல்வி அடையும். மேலும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளையும் நீங்கள் செயலிழக்கச் செய்யலாம்.
இதனால், வெளிநாடுகளில் பரிவர்த்தனை செய்ய பயன்படுத்த முடியாது.ஒரு சில வங்கிகள் முழுவதுமாக கார்டுகளை லாக் செய்யவும் அனுமதிக்கின்றன. இந்த வரம்புகளுக்கான செயல்முறை வங்கிக்கு வங்கி வேறுபடலாம். ஒரு சில வங்கிகள் கார்டிலேயோ மேற்கொள்ள அனுமதிக்கின்றன. சில வங்கிகள் நெட் பாங்கிங் மூலம் செய்ய அனுமதிக்கின்றன.கார்டு ஆப்ஷன் பகுதிக்குச்சென்று, அதில் பரிவத்தனை வரம்பை நிர்ணயித்துக்கொள்ளலாம்.
பரிவர்த்தனை வரம்பு மற்றும் உள்ளூர் அல்லது வெளியூர் பரிவர்த்தனைக்கான வாய்ப்புகள் இதில் தோன்றும். சில வங்கிகளில், போன் பாங்கிங் வாய்ப்பையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|