பதிவு செய்த நாள்
23 ஏப்2019
23:35

கோவை : பஞ்சு விலையேற்றத்தை எதிர்கொள்ள, ‘ஸ்பின்னிங் மில்’களுக்கு, ‘இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பான, ஐ.டி.எப்., ஆலோசனை தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில், வாங்குமிடத்தில், 42 ஆயிரத்து, 700 ரூபாயாக இருந்தது. கடந்த, 45 நாட்களில், ஒரு கண்டிக்கு, 5,500 ரூபாய் உயர்ந்து, தற்போது, 48 ஆயிரத்து, 200க்கு விற்பனையாகிறது. போக்குவரத்து செலவுடன் சேர்த்து, 49 ஆயிரத்து, 700 ரூபாய் ஆகிறது.
ஐ.டி.எப்., ஒருங்கிணைப்பாளர், பிரபு தாமோதரன் கூறியதாவது: ஸ்பின்னிங் மில்களில், உற்பத்தி செலவில், 65 சதவீதம் முதல், 70 சதவீதம் வரை, பஞ்சுக்கு செலவிடப்படுகிறது. இந்த குறுகிய கால, 13 சதவீத விலையேற்றத்தின் தாக்கத்தை ஈடுகட்ட, நுால் விலை உயர்ந்து வருகிறது. இதுவரை நுால் விலை, 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, துணி வகைகளின் விலை உயரும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இந்த மாற்றத்தை கணக்கில் கொண்டு, இனி வரும் ஆர்டர்களை உறுதி செய்தல் நல்லது.
ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள உற்பத்தியாளர்கள், பஞ்சு வர்த்தகத்தின் நிலையையும், விலையின் போக்கையும் உணர்ந்து, வரும் நாட்களில் விலை மாற்றங்களை செய்து கொள்வதன் மூலமே, இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|