லாபமற்ற திட்டங்கள் கைவிடும் அரசு கேபிள்லாபமற்ற திட்டங்கள் கைவிடும் அரசு கேபிள் ...  எல்.ஐ.சி., தென்மண்டல புதிய மேலாளர் கதிரேசன் எல்.ஐ.சி., தென்மண்டல புதிய மேலாளர் கதிரேசன் ...
‘இ – வே பில்’ திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு முறைகேட்டை தடுக்க அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2019
05:10

புதுடில்லி: சரக்கு போக்­கு­வ­ரத்­தில்,வரி ஏய்ப்பு உள்­ளிட்ட முறை­கே­டு­கள் நடை­பெ­று­வதை தடுக்க, ‘இ – வே பில்’ திட்­டத்­தில் சில மாற்­றங்­களை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் செய்­துள்­ளது.

ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி திட்­டத்­தில் பதிவு செய்த வணிக நிறு­வ­னங்­கள், வேறு மாநி­லங்­க­ளுக்கு அனுப்­பும், 50 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பிற்கு மேற்­பட்ட சரக்­கிற்கு, ‘இ – வே பில்’ எனப்­படும் மின் வழிச்­சீட்டு அவ­சி­ய­மா­கும். சரக்கு கொண்டு செல்லும் ­போது, வரி அதி­கா­ரி­கள் ஆய்வு செய்­தால், இந்த சீட்டை காட்ட வேண்­டும்.

ஓட்டை:
வரி ஏய்ப்பை தடுப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட இந்த மின்­வ­ழிச் சீட்டு திட்­டத்­தி­லும், சில ஓட்­டை­கள் மூலம், வரி செலுத்­தா­மல் பல்­வேறு முறை­கே­டு­கள் நடப்­பது, தெரி­ய­வந்­துள்­ளது. கடந்த ஆண்டு, ஏப்., – டிசம்­பர் வரை­யி­லான, ஒன்­பது மாதங்­களில், 15 ஆயி­ரத்து, 278 கோடி ரூபாய் அள­விற்கு, ஜி.எஸ்.டி., ஏய்ப்பு, விதி­மீ­றல் போன்­றவை நடை­பெற்­றுள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது, தொடர்­பாக, 3,626 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ளன. இத்­த­கைய முறை­கே­டு­களை தடுக்க, மின்­வ­ழிச் சீட்டு நடை­மு­றை­யில் சில மாற்­றங்­களை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதன்­படி, இனி,‘பின்­கோடு’ எனப்­படும், அஞ்­ச­லக குறி­யீடு அடிப்­ப­டை­யில், சரக்கு போக்­கு­வ­ரத்து நடை­பெ­றும் துாரம், தன்­னிச்­சை­யாக கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­படும். சரக்கு அனுப்­பு­வோர், அதி­க­பட்­ச­மாக, 10 சத­வீத துாரத்தை மட்­டுமே, மின்­வ­ழிச் சீட்­டில் குறிப்­பிட முடி­யும். உதா­ர­ண­மாக, அஞ்­ச­லக குறி­யீடு அடிப்­ப­டை­யில், 655 கி.மீ., துாரத்­திற்கு சரக்கு போக்­கு­வ­ரத்து நடை­பெற்­றால், கூடு­த­லாக, 65 கி.மீ., துாரம் மட்­டுமே பதிவு செய்ய முடி­யும். இதன்­படி, அதி­க­பட்­ச­மாக, 720 கி.மீ., வரை தான், மின்­வ­ழிச் சீட்டு செல்­லு­ப­டி­யா­கும்.

இத­னால், துார அடிப்­ப­டை­யில் நடை­பெ­றும் முறை­கே­டு­கள் முடி­வுக்கு வரும். மேலும், ‘இன்­வாய்ஸ்’ எனப்­படும், விலைப்­பட்­டி­யல் மூலம், பல மின்­வ­ழிச் சீட்­டு­களை உரு­வாக்­கும் நடை­மு­றை­யும் முடி­வுக்கு வரு­கிறது. இனி, ஒரு விலைப் பட்­டி­யல் எண் மூலம், மின் வழிச்­சீட்டு உரு­வாக்­கப்­பட்­டால், அதே எண்­ணில் மீண்­டும் மின் வழிச் சீட்டை உரு­வாக்க முடி­யாது.

முற்றுப்புள்ளி:
சரக்கு அனுப்­பும் நிறு­வ­னம், சரக்கு பெறும் நிறு­வ­னம், சரக்கை எடுத்­துச் செல்­லும் சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னம் ஆகி­யவை, ஒரு விலைப்­பட்­டி­யல் எண் மூலம், பல மின்­வ­ழிச் சீட்­டுகளை உரு­வாக்­கு­வது சாத்­தி­ய­மில்லை என்­ப­தால், இவ்­வ­ழி­யி­லான முறை­கேட்­டிற்­கும் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதே­ச­ம­யம், சரக்கு போக்­கு­வ­ரத்து நடை­பெ­றும் ­போது தாம­தம் ஏற்­ப­டும்­பட்­சத்­தில், மின்­வ­ழிச் சீட்டு காலா­வதி நேரத்தை நீட்­டிக்க வழி வகை செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும், மின்­வ­ழிச் சீட்­டின் காலா­வதி நேரம் குறித்த தக­வல்­களை அறி­யும் வச­தி­யும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் மூலம், மின்­வ­ழிச் சீட்­டில் குறிப்­பி­டப்­பட்ட நேரத்­திற்­குள் சரக்கு சென்­ற­டை­வதை, உறுதி செய்து கொள்ள முடி­யும். இத்­த­கைய மாற்­றங்­கள், மின்­வ­ழிச் சீட்டு நடை­மு­றை­யில், வரி ஏய்ப்பு மற்­றும் முறை­கே­டு­களை குறைக்க உத­வும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கட்­டுப்­பாடு:
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல், தொடர்ந்து இரண்டு மாதங்­கள் நிலுவை இருந்­தால், ‘இ – வே’ பில் பெற முடி­யாது என்ற புதிய கட்­டுப்­பாடு ஜூனில் நடை­மு­றைக்கு வர உள்­ளது.

மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் ‘இ – வே பில்’ நடை­மு­றை­யில் செய்­துள்ள மாற்­றங்­கள் வர­வேற்­கத்­தக்­கது. இத­னால், நிறு­வ­னங்­கள் மற்­றும் வரி அதி­கா­ரி­கள் என, இரு தரப்­பி­ன­ரும் பய­ன­டை­வர். வரி ஏய்ப்பு தடுக்­கப்­படும். வர்த்­த­கம் புரி­வது மேலும் சுல­ப­மா­கும்
– ரஜத் மோகன், பங்­கு­தா­ரர், ஏ.எம்.ஆர்.ஜி அண்டு அசோ­சி­யேட்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)