பதிவு செய்த நாள்
29 ஏப்2019
23:12
ஈரோடு: ‘‘கடந்தாண்டு பெய்த பரவலான மழையால், கொப்பரை வரத்து தொடர்ந்து சீராக உள்ளது. இதனால், 13 மாதங்களுக்கு மேலாக, கிலோ, 85 முதல், 100 ரூபாயை கடந்து விலை போகிறது,’’ என, தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்தாண்டு, டெல்டா மாவட்டத்தில், ‘கஜா’ புயல் தாக்கியதால், பல லட்சம் மரங்கள் பாதிக்கப்பட்டன. அதே நேரம், ஈரோடு, திருப்பூர் உட்பட கொங்கு மண்டலம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில், கடந்தாண்டு முழுவதும் சீரான மழை பெய்தது. இதனால், கொப்பரை தேங்காய் வரத்து சீராகவே இருந்தது.
கடந்த, 27ம் தேதி நிலவரப்படி, பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை முதல் தரம், 1 கிலோ, 95.05 முதல், 99.65 ரூபாய்; இரண்டாம் தரம், 45.85 – 93.90 ரூபாய் வரை விற்பனையானது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர், வெங்கடாசலம் கூறியதாவது: கடந்தாண்டு கஜா புயலால், டெல்டா மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், தமிழகத்தில் மொத்த தேங்காய், இளநீர், கொப்பரை உற்பத்தியில், 30 முதல், 40 சதவீதம் பாதிக்கப்பட்டது. ஆனாலும், கொங்கு மண்டலத்திலும், கர்நாடகா, கேரளாவிலும் அதிக தேங்காய் விளைச்சல் தொடர்கிறது. கர்நாடகா, கேரளாவை விட, நல்ல விலை கிடைப்பதால், கொப்பரையை இங்கு கொண்டு வந்து விற்கின்றனர்.தேசிய அளவில் எண்ணெய் தேவை அதிகரிப்பு, பிற பயன்பாட்டுக்கு எண்ணெய் வினியோகம் அதிகரிப்பால், காய் வரத்தும், விலை உயர்வும் நீடிக்கிறது.இவ்வாறு அவர்கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|