பதிவு செய்த நாள்
05 மே2019
23:38

தங்கம் வாங்குவது பாரம்பரியமாக அமைவதோடு, நல்ல முதலீடாகவும் அமைகிறது. அட்சய
திரிதியை திருநாளில், தங்கம் வாங்கினால், வளம் பெருகும் என்ற நம்பிக்கை அடிப்படையில், இந்த நாளில் தங்கம் வாங்கும் பழக்கமும் பரவலாக இருக்கிறது.
தங்கத்தை பலவிதங்களில் வாங்கி முதலீடு செய்யலாம். நகை வடிவில் தங்கம் வாங்குவது பரவலாக இருக்கிறது. நகைகள் தவிர, தங்க நாணயம் அல்லது தங்க கட்டியாகவும் வாங்கலாம். நகையாக வாங்கும் போது செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க நகைகளுக்கான ஹால்மார்க் முத்திரையையும் கவனிக்க வேண்டும்.
நாணயம் வடிவில் தங்கத்தை வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் வாங்கலாம். நகைக்கடை நிறுவனங்கள் மூலமும் வாங்கலாம். 5 கிராம், 10 கிராம், 20 கிராம் என, பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கின்றன.நகை மற்றும் நாணயம் தவிர, காகித வடிவிலும் தங்கம் வாங்கலாம். மியூச்சுவல் பண்ட் ரகமான இ.டி.எப்., வாயிலாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இப்போது அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரமும் பிரபலமாக உள்ளன.
பேடிஎம், அமேசான்பே, கூகுள்பே உள்ளிட்ட செயலிகள் வாயிலாக, டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். முதலீட்டு நோக்கில், ஒருவர் தனது முதலீடு தொகுப்பில், 10 சதவீத அளவிற்கு தங்கத்தை கொண்டிருப்பது ஏற்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|