பதிவு செய்த நாள்
05 மே2019
23:41

‘கிரெடிட் கார்டு’களில் பல ரகங்கள் இருக்கின்றன. இவற்றில் பயணியருக்கான பிரத்யேகமான, ‘டிராவல் கார்டு’ எனப்படும், பயண கடன் அட்டைகளும் வேகமாக பிரபலமாகி வருகின்றன. கோடை விடுமுறை கொண்டாட்டத்திற்கு மத்தியில், இந்த வகை கிரெடிட் கார்டுகள்
வாயிலாக, முழு பயன் பெறுவது எப்படி என, பார்க்கலாம்:
பயண நண்பன்: டிராவல் கார்டு என்றால், பயணிகளின் தேவைகளை மனதில் கொண்டு, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார்டாகும்.
வழக்கமான கிரெடிட் கார்டுகள், ‘கேஷ்பேக்’ போன்ற சலுகைகளை
அளிக்கின்றன என்றால், டிராவல் கார்டுகள், பயணம் சார்ந்த சலுகைகளை
அளிக்கின்றன. கோ பிராண்டட், கோ பிராண்டட் அல்லாத வடிவில் கிடைக்கின்றன.
எந்த ரகம்? டிராவல் கார்டுகள், பயண செலவை குறைக்க உதவக்கூடிய ரிவார்ட் புள்ளிகளை அளிக்கின்றன. கோ- பிராண்டட் கார்டுகள் எனில், பங்குதாரர் பிராண்டை பயன்படுத்தும் போது சலுகை அளிக்கிறது. இரண்டாம் வகை கார்டு எனில், பயண செலவுகளில் அதிக சலுகை அளிக்கிறது. பயண முன்பதிவுகளில் இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்ன பயன்? டிராவல் கார்டுகள் பயண செலவுகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்வதோடு, அவற்றுக்கு சலுகைகளையும் பெற்றுத் தருகின்றன. வெளிநாட்டு பணத்தை உள்ளீடு செய்ய உதவும், பிரி பெய்டு கார்டுகளும் இருக்கின்றன. கார்டை பயன்படுத்தும் போது சலுகை
புள்ளிகளை பெறலாம்.
எப்படி பெறுவது? பொதுவாக ஒருவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியையே, டிராவல் கார்டு பெற அணுகலாம். ஆனால், இது எல்லா நேரங்களிலும் சிறந்த தேர்வாக அமையும் என சொல்வதற்கில்லை. பயனாளிகள் தங்கள் பயண பழக்கத்திற்கு ஏற்ற வகையிலான கார்டை தேர்வு செய்ய வேண்டும்.
செலவு
கவனம்: கிரெடிட் கார்டு போலவே, டிராவல் கார்டும் வசதியானது
என்றாலும், இதற்கான செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இவற்றுக்கான அனுமதி கட்டணம், ஆண்டு கட்டணம் போன்றவற்றை கணக்கில்
கொண்டு, ஒட்டுமொத்த நோக்கில் பலன் அளிக்க கூடியதா என்பதன்
அடிப்படையில், கார்டை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|