பதிவு செய்த நாள்
05 மே2019
23:47

எதிர்பாராமல் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க, கைவசம் போதுமான அவசர கால நிதி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நிதி
திட்டமிடலில், எமர்ஜென்சி பண்ட் எனப்படும், அவசர கால, நிதியை
உருவாக்கி கொள்வது பற்றி தவறாமல் வலியுறுத்தப்படுகிறது. எதிர்பாராமல் உண்டாகும் பணியிழப்பு,
உடல் நலக்குறைவு போன்றவற்றால், வருமானம் தடைபடுவதால் ஏற்படும்
நெருக்கடியை சமாளிக்க ஒவ்வொருவரும் அவசர கால நிதியை உருவாக்கி
வைத்திருக்க வேண்டும் என்பது, நிதி திட்டமிடலில் பாலபாடமாக சொல்லப்பட்டு வருகிறது.
அண்மையில், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவன பிரச்னை காரணமாக அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது, அவசர கால நிதியின் அவசியத்தை உணர்த்தியுள்ளது.குடும்பத்திற்கான
வருமானம் தடைபடும் போது, நிலைமையை எதிர்கொள்ளவும், அதிலிருந்து
மீண்டு வரவும், அத்தியாவசிய செலவுகளை சமாளிப்பதற்கான
நிதி கையில் இருக்க வேண்டும்.
பொதுவாக,
ஆறு மாத கால அடிப்படை செலவுகளுக்கு தேவையான தொகையை, இவ்வாறு அவசர
கால நிதியாக வைத்திருக்க வேண்டும் என்கின்றனர். மாதாந்திர
செலவுகள், கடனுக்கான மாதத்தவணைகள், கல்விச்செலவு உள்ளிட்ட,
தவிர்க்க இயலாத செலவுகளை மேற்கொள்ள இந்த நிதி உதவும். நெருக்கடியான நேரங்களில், மாதச்செலவுகளுக்கு என்ன
செய்வது என்ற, கேள்வி கூடுதல் மனச்சுமையை ஏற்படுத்தாமல் இருக்க இது வழி செய்யும்.
எந்த
ஒரு நிதி திட்டமிடலும், அவசர கால நிதியை உருவாக்கி கொள்வதில்
இருந்து துவங்குகிறது. கைவசம் சேமிப்பு இருந்தால் இந்த நிதியை
உருவாக்குவது எளிதானது. இல்லை எனில், இதற்கென திட்டமிட்டு சேமிக்க வேண்டும். அவசர கால நிதியை உருவாக்கிய பிறகு
அதை பாதுகாப்பாக பராமரிப்பது முக்கியம். வங்கி சேமிப்பு கணக்கு
அல்லது வைப்பு நிதியில் இந்த தொகையை வைத்திருக்கலாம். கூடுதல் தொகை
தானாக வைப்பு நிதிக்கு மாறும் வகையான சேமிப்பு கணக்கு திட்டத்தையும்
நாடலாம்.
‘லிக்விட் பண்ட்’ திட்டங்களும் இதற்கு மிகவும் ஏற்றதாக அமைகின்றன. தேவைப்படும் போது பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி இருக்க வேண்டும். ‘ரிஸ்க்’ இல்லாத முதலீட்டு வாய்ப்பை நாட வேண்டும்.ஆறு மாத கால அடிப்படை செலவுகளுக்கு
தேவையான தொகை அவசர கால நிதியாக இருக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டாலும், சூழலுக்கு ஏற்ப ஒரு சிலருக்கு அதிக தொகை
தேவைப்படலாம்.
உதாரணமாக, பணியிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்
உள்ள துறைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் மீண்டும் வேலை
கிடைப்பது கடினமாக துறைகளில் உள்ளவர்கள், ஆறு முதல், ஒன்பது மாத
கால அடிப்படை செலவுகளுக்கு தேவையான தொகையை வைத்திருப்பது நலம். அதே போல, அதிக சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களும் மற்றவர்களை விட கூடுதலான தொகையை உருவாக்கி வைத்துக்கொள்வது ஏற்றதாக இருக்கும்.
மேலும், ஒவ்வொருவரும் தங்கள் சூழலுக்கு
ஏற்ப இந்த நிதியை உருவாக்கி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பணியிழப்பு காலம் நீடிக்கும் வாய்ப்பு இருந்தால் அதற்கேற்ப
சேமித்திருக்க வேண்டும். முதல் மூன்று மாத கால தொகையை வைப்பு நிதி
அல்லது லிக்விட் பண்ட் போன்றவற்றிலும், எஞ்சிய தொகையை, ‘ஹைப்ரிட்
பண்ட்’ போன்றவற்றிலும் முதலீடு செய்திருக்கலாம்.
அவசர கால நிதியை பயன்படுத்தும் காலத்தில், தேவையற்ற செலவுகளை கண்டறிவது, சிக்கனத்தை கடைப்பிடிப்பது, வாழ்வியல் செலவுகளை தவிர்ப்பது ஆகியவையும் மிகவும் அவசியமாகும். அதற்கேற்ப குடும்ப பட்ஜெட்டை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|