இஷ்டம் போல் கேபிள் ஆப்பரேட்டரை மாற்றும் வசதி:தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீவிரம் இஷ்டம் போல் கேபிள் ஆப்பரேட்டரை மாற்றும் வசதி:தொலைதொடர்பு ஒழுங்குமுறை ... ...  ஐ.டி.சி., நிறுவன தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர் மரணம் ஐ.டி.சி., நிறுவன தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர் மரணம் ...
தொழில் துறை உற்பத்தி சரிவு 11 துறைகளில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2019
23:36

புதுடில்லி:கடந்த மார்ச்சில், தொழில் துறை உற்பத்தி, 0.1 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது.


கடந்த ஆண்டு இதே மாதத்தில் இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.3 சதவீதமாக இருந்தது.தயாரிப்பு துறை உற்பத்தி குறைந்ததால், 21 மாதங்களில் இல்லாத அளவிற்கு, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சரிவடைந்துள்ளது.இதற்கு முன், 2017, ஜூன் மாதம், இத்துறை, 0.3 சதவீதம் பின்னடைவை கண்டிருந்தது.


கடந்த, 2018 -- 19ம் நிதியாண்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 3.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது. முந்தைய, 2017 -- 18ம் நிதியாண்டில், இத்துறை, 4.4 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.கடந்த, 2016 -- 17 மற்றும் 2015 -- 16ம் நிதியாண்டுகளில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, முறையே, 4.6 சதவீதம் மற்றும் 3.3 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி, 0.4 சதவீதமாக பின்னடைவை கண்டிருந்தது. இது, கடந்த ஆண்டு, மார்ச்சில், 5.7 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது.



இதே காலத்தில், பொறியியல் சாதனங்கள் பிரிவின் உற்பத்தி, 3.1 சதவீதத்தில் இருந்து, 8.7 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது.மின் துறை உற்பத்தி, 5.9 சதவீதத்தில் இருந்து, 2.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.1 சதவீதத்தில் இருந்து, 0.8 சதவீதமாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், அடிப்படை பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் துறை, முறையே, 2.5 சதவீதம் மற்றும் 6.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.



நுகர்வோர் சாராத சாதனங்கள் துறையின் உற்பத்தி, 0.3 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. தொழில் துறை உற்பத்தியை கணக்கிட உதவும், 23 துறைகளில், 11 துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன.இதனிடையே, பிப்ரவரி மாத தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மறுமதிப்பீட்டில், 0.1 சதவீதத்தில் இருந்து, 0.07 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)