பதிவு செய்த நாள்
11 மே2019
23:43

புதுடில்லி:சிகரெட் முதல், ஓட்டல் வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவர், ஒய்.சி.தேவேஷ்வர், 72, நேற்று காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த, 1968ல், ஐ.டி.சி.,யில் சேர்ந்த தேவேஷ்வர், 1984ல், அந்நிறுவன இயக்குனராகவும், 1996ல், தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவராகவும் உயர்ந்தார்.சிகரெட் தொழிலில் மட்டும் ஈடுபட்டிருந்த நிறுவனத்தை, நுகர்பொருள், காகிதம், ஓட்டல், வேளாண் பொருட்கள் என, பல துறைகளில் களமிறக்கி வெற்றி கண்ட பெருமை, தேவேஷ்வரையே சாரும்.அவர், தலைமை பொறுப்பை ஏற்றபோது, ஐ.டி.சி., நிறுவனத்தின் வருவாய், 5,200 கோடி ரூபாய்; மொத்த லாபம், 452 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.
இந்த வருவாய், 2017- – 18ம் நிதியாண்டில், 44 ஆயிரம் கோடி ரூபாய்; நிகர லாபம், 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ஐ.டி.சி., 2017ல், செயல் தலைவர் பதவியை, தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என, பிரித்தது. அது முதல், செயல் சாரா தலைவராக, நிறுவனத்தின் ஆலோசகராக, தேவேஷ்வர் செயல்பட்டு வந்தார்.‘பத்மபூஷண்’ உள்ளிட்ட பல விருதுகளுடன், பல்வேறு அமைப்புகளின் தலைமை பொறுப்பு வகித்தவர். ‘‘அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது,’’ என, ஐ.டி.சி., தலைமை செயல் அதிகாரி, சஞ்சீவ் புரி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|