கணினிமயமாகிறது, ‘ஜி.எஸ்.டி., ரீபண்ட்’ கணினிமயமாகிறது, ‘ஜி.எஸ்.டி., ரீபண்ட்’ ... பங்குச்சந்தைகளில் ஏற்றமான சூழல் பங்குச்சந்தைகளில் ஏற்றமான சூழல் ...
வெளியேறும், ‘ஜெட் ஏர்வேஸ்’ அதிகாரிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
00:01

புதுடில்லி:‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி வினய் துபேவும், தலைமை நிதி அதிகாரியும், துணை தலைமை செயல் அதிகாரியுமான, அமித் அகர்வாலும் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளனர்.முதலில் அமித் அகர்வால் ராஜினாமா செய்து விட்டதாக, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப் பட்டது. அடுத்த சில மணி நேரங்களில், தலைமை செயல் அதிகாரி வினய் துபேவும் ராஜினாமா செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.கடுமையான கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, ஏப்., 17ம் தேதி முதல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்த நிறுவனத்தை, வேறு நிறுவனங்கள் ஏற்று நடத்தும் முயற்சியும் இது வரை கைகூடவில்லை.இதற்கிடையே, ஊழியர்கள் தங்களது ஊதியப் பாக்கிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் உயரதிகாரிகளும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேற துவங்கி இருக்கின்றனர்.கடந்த ஏப்ரலில், இந்நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனர்களில் ஒருவரான, நஸிம் ஜைதி, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்து, வெளியேறினார்.அடுத்து, நிறுவனரான நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் பதவி விலகினர். இவர்களை தொடர்ந்து, ராஜ்ஸ்ரீ பதி நிர்வாகக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார்.கடந்த வாரம், நரேஷ் கோயலுக்கு நெருக்கமான வராக சொல்லப்படும், கவுரங் ஷெட்டி, செயல் சாரா இயக்குனர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.இந்நிலையில், தற்போது வினய் துபேவும், அமித் அகர்வாலும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.இவர்கள் இருவரும் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக, நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தலைமை மனித வள அதிகாரியான, ராகுல் தனேஜாவும் ராஜினாமா செய்து விட்டதாக வரும் செய்திகள், அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: கடந்த நிதி­யாண்­டில், வரு­வாய் ஈட்­டி­ய­தில், முகேஷ் அம்­பா­னி­யின், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், ... மேலும்
business news
பல்லடம்: ‘ஜி.எஸ்.டி., குறைக்­கப்­ப­ட­லாம்’ என்ற எதிர்­பார்ப்­பில், பல்­ல­டம் பகு­தி­யில் விசைத்­தறி ஜவு­ளி­கள் ... மேலும்
business news
புதுடில்லி: மத்­திய அரசு மேற்­கொண்ட, 656 கோடி ரூபாய் மூல­த­னத்­திற்கு, பங்­கு­கள் வழங்­கு­மாறு, இந்­திய விமான ... மேலும்
business news
தொழில் வளர்ச்­சியை விரை­வு­ப­டுத்­தும் வகை­யில், கட்­டு­மான திட்­டங்­க­ளுக்கு விண்­ணப்­பம் வந்­த­தில் இருந்து, 48 ... மேலும்
business news
மும்பை: தேர்­த­லுக்கு பிந்­தைய கருத்­துக் கணிப்­பில், பா.ஜ., தனிப் பெரும்­பான்­மை­யு­டன் மீண்­டும் ஆட்சி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Manian - Chennai,India
15-மே-201903:10:03 IST Report Abuse
Manian நிறுவனம் கொள்ளை அடிக்கும்போது அல்லது தவறான நிர்வாகம் செய்யும் பொது இதன் தலைவரிடம் -கோயலிடம்- ஏன் இவர்கள் சண்டை இடவில்லை, அப்போது இவர்கள் பதவி நீங்கி இருந்தால் இப்படி வருமா? தலைவரின் கர்வம், அடிமைத்தனத்திற்கு பயந்து, அவரது ஆளுமை திறமை இன்மையை, ஈகோவை தடுக்காத இவரக்ளும் குற்றவாளிகளே.அதேபோல, வேலையாட ளும் விடடு கொடுத்து சம்பளம் குறைந்தால் பரவாயில்லை, வேலை இருக்க வேண்டும் என்று ஏன் எண்ணவில்லை? ஆகமொத்தம் சுயநலமிகளே இந்த ஏர்வேஸை தீரத்துகட்டினார்கள். ஒரு விமானக் கம்பெனியை உண்டாக்குவது வெகு கடினம், அழிப்பது சுலபம். .
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)