மதுரையில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிமதுரையில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி ... 'விஷன் 2021' கொள்கை வெளியீடு; மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் 'விஷன் 2021' கொள்கை வெளியீடு; மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் : 10 மில்லியன் உற்பத்தி எட்டி சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
12:05

காஞ்சிபுரம் : ஜப்பானிய இரு சக்கர உற்பத்தியாளரான இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் 10 மில்லியன் (1 கோடி) யூனிட்டுகள் உற்பத்தி சாதனை செய்துள்ளதை அறிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையான சாதனையாகும். இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்திக்கு, சூரஜ்பூர், ஃபரிதாபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள மூன்று உற்பத்தித் தொழிற்சாலைகளும் இணைந்து இந்த பங்களிப்பை செய்துள்ளன.

யமஹாவின் மோட்டார் சைக்கிள்களில் சிறந்த விற்பனை மாடலான எப்.இசட்.எஸ். எப்1 பதிப்பு 3.0, சென்னை தொழிற்சாலையில் இருந்து 10 மில்லியனை (1 கோடியை) தொடும் தயாரிப்பாக வெளிவந்தது. இந்த நிகழ்ச்சியில் யமஹா மோட்டார் நிறுவனம், லிமிடெட், ஜப்பான், யமஹா மோட்டார் இந்தியா நிறுவனங்களின் குழுமங்கள், மிட்சுயி அண்ட் கோ. லிமிடெட் ஆகியவற்றின் மூத்த நிர்வாக உறுப்பினர்கள், வெண்டார் பார்க் நிறுவனங்கள், யமஹா சென்னை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஊழியர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த சமயத்தில் 2012 மற்றும் 2019-க்கு இடையில் கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 5 மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்த மற்றொரு பெரிய சாதனையை இந்த நிறுவனம் செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஸ்கூட்டர் மாடல்கள் 44 சதவிகிதம் பங்களிப்பு செய்துள்ளன, அதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளது "பாஸினோ". இன்றைய தேதி வரை தயாரிக்கப்பட்ட 10 மில்லியன் யூனிட்டுகளில், 80 சதவிகித யூனிட்டுகள் சூரஜ்பூர், பரிதாபாத் ஆகிய வட மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டது மற்றும் 20 சதவிகிதம் தென் மாநிலமான சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிள் மாடல்கள் 77.88 லட்சமாகவும், ஸ்கூட்டர் மாடல்கள் 22.12 லட்சமாகவும் பங்களிப்பு செய்துள்ளன.

“இந்த வருடங்கள் அனைத்திலும் யமஹாவின் பயணம் மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. நாடு முழுவதிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து தனிச் சிறப்புமிக்க ஆதரவை நாங்கள் பெற்றிருக்கிறோம். ஆர்வத்தைத் தூண்டுகிற, ஸ்டைலான மற்றும் ஸ்போர்டியான, எங்கள் தயாரிப்புகளுக்கு வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் தேவையே இந்த சாதனைகளுக்கு ஒரு சாட்சியமாகும். எங்கள் ஊழியர்கள், வர்த்தக பங்குதாரர்கள், சப்ளையர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. அவர்கள், இந்த முக்கிய மைல்கல்லை அடைய நிறுவனத்தின் வர்த்தக வழிகாட்டுதலுக்கு இணங்க ஒத்துழைத்து ஒரு முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். “நாங்கள் முன்னோக்கி செல்லும்போது, உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மூலம் எமது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்துவோம் மேலும் அவர்களது வாழ்க்கைக்கு சக்தியளிப்போம்”, என்று யமஹா மோட்டார் இந்தியா நிறுவனங்களின் குழும தலைவர் மொடஃபூமி ஷிடராகூறினார்.

1985 ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான அதன் பயணத்தில், உற்பத்தியில் பல குறிப்பிடத்தக்க தருணங்களை நிறுவனம் கண்டுள்ளது. 1999 ஆம் ஆண்டில் சூரஜ்பூர் தொழிற்சாலை 1 மில்லியன் யூனிட் உற்பத்தி மைல்கல்லை அடைந்து முதல்முறையாக பெரிய சாதனை படைத்தது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2012ல் அதே தொழிற்சாலையில் 5 மில்லியன் யூனிட் உற்பத்தி சாதனை எட்டப்பட்டது. முதல் ஸ்கூட்டர் மாடல் ரே 2012இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 2016-ல் ஐ.ஒய்.எம். அதன் ஸ்கூட்டர்கள் ஒரு மில்லியன் உற்பத்தி என்ற சாதனையை எட்டியபோது மற்றொரு மகத்தான முன்னேற்றம் எட்டப்பட்டது. இப்போது, 7 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் அதன் புதிய உற்பத்தி வசதி மற்றும் பரந்த தயாரிப்பு பிரிவுகளின் ஆதரவுடன் நிறுவனம் வெற்றிகரமாக 10 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி குறியீட்டை அடைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)