தேச விரோத நிறுவனங்களுக்கு மூடுவிழா; புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு தேச விரோத நிறுவனங்களுக்கு மூடுவிழா; புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு ...  அனைவருக்கும் நுகர்வோர் தரவு  ‘நிடி ஆயோக்’ புதிய திட்டம் அனைவருக்கும் நுகர்வோர் தரவு ‘நிடி ஆயோக்’ புதிய திட்டம் ...
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.175 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
06:15

சென்னை: ‘‘சிட்டி யூனியன் வங்கியின், 2018 – 19ம் நிதியாண்டின் நிகர லாபம், 15 சதவீதம் உயர்ந்து, 175 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, வங்கியின் நிர்வாக இயக்குனர், என்.காமகோடி தெரிவித்தார்.

இது குறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம், 17 சதவீதம் உயர்ந்து, 75 ஆயிரத்து, 513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2017 – 18ம் நிதியாண்டில், 61 ஆயிரத்து, 91 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் வைப்பு தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 38 ஆயிரத்து, 448 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 32 ஆயிரத்து, 853 கோடி ரூபாயாக இருந்தது.

இதே போன்று, வங்கி வழங்கிய கடன் தொகை, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33 ஆயிரத்து, 65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 28 ஆயிரத்து, 238 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர வட்டி வருவாய், 1,430 கோடியிலிருந்து, 1,611 கோடி ரூபாயாக அதிகரித்து, 13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிகர லாபம், 592 கோடியிலிருந்து, 683 கோடி ரூபாயாக அதிகரித்து, 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.காசா எனும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்பு தொகை, 7,957 கோடியிலிருந்து, 9,698 கோடி ரூபாயாக அதிகரித்து, 22 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மொத்த வாராக் கடன், 3.03 சதவீதத்திலிருந்து, 2.95 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 – 19ல், 50 கிளைகளும், 64 ஏ.டி.எம்., மையங்களும் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 50 கிளைகளும், 100 ஏ.டி.எம்., மையங்களும் துவங்கப்படும். இதுவரை மொத்தம், 650 கிளைகளும், 1,685 ஏ.டி.எம்., மையங்களும் உள்ளன.இவ்வாறு, காமகோடி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி, ஜூன் 16-–கடந்த மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3.93 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை, ஆறு ... மேலும்
business news
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் ... மேலும்
business news
­புது­டில்லி:நாட்­டின், கச்சா உருக்கு உற்­பத்தி, மே மாதத்­தில், 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து, ... மேலும்
business news
­புது­டில்லி:வரப்­போ­கும் பட்­ஜெட்டை முன்­னிட்டு, தக­வல் தொழில்­நுட்­பம், ஸ்டார்ட் அப் உள்­ளிட்ட துறை­க­ளைச் ... மேலும்
business news
புதுடில்லி:தொழில் துறை – அரசு இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Manian - Chennai,India
18-மே-201908:21:05 IST Report Abuse
Manian சிறந்த நிறுவனம். தரமான சேவை. இதுவே இவர்களின் முதன்மைக்கு காரணம். வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)