பதிவு செய்த நாள்
18 மே2019
23:41

மும்பை: மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, அதன் பரிந்துரையை, ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை பரவலாக்கவும், பணப் பட்டுவாடா முறைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், இந்தாண்டு ஜனவரியில், உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது.ஐந்து உறுப்பினர்களை கொண்ட இக்குழுவின் தலைவராக, 'இன்போசிஸ்' துணை நிறுவனரும், 'ஆதார்' திட்ட வடிவமைப்பாளருமான, நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டார்.இக்குழு, வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிந்து, மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கையை உருவாக்கியுள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழு, பாதுகாப்பான மின்னணு பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கிஉள்ளது.அதில், தற்போதைய நடைமுறையில் உள்ள இடர்ப்பாடுகளை அகற்றி, பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மின்னணு பரிவர்த்தனைகளை பரவலாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து, நம் நாட்டிற்கு தேவையான, மிகச் சிறந்த அம்சங்களை தேர்வு செய்யும்.இந்த பரிந்துரைகள், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட, 'விஷன் 2021' கொள்கையில் சேர்க்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதனால், நாட்டின் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|