பதிவு செய்த நாள்
20 மே2019
10:41

மும்பை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் காணப்பட்ட போதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக வெளியாகி உள்ள கருத்துக்கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
பா.ஜ., தலைமையிலான அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ள கருத்துகணிப்பு முடிவுகளை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதால், ரூபாய் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 20, காலை 9.15 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து 69.44 ஆக உள்ளன. முன்னதாக கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு 70.23 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|