வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு : 1422 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2019
12:43

மும்பை : பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்தன. பங்குச்சந்தைகளின் தொடர் அதிரடி உயர்வால் ஒரே நேரத்தில் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.3.2 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது.
காலையில் வர்த்தகம் துவங்கிய போது 920 புள்ளிகளை கடந்து வர்த்தகமான சென்செக்ஸ், பகல் 12.15 மணியளவில் 1000 புள்ளிகளை கடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில் சென்செக்ஸ் 1335 புள்ளிகளை கடந்து 39,294 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் அதிரடியாக உயர்ந்து 11,800 புள்ளிகளை கடந்துள்ளது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1421.90 புள்ளிகள் உயர்ந்து 39,352.67 புள்ளிகளாகவும், நிப்டி 421.10 புள்ளிகள் உயர்ந்து 11,828.25 புள்ளிகளாகவும் உள்ளன. நிறுவனங்களை பொருத்த வரை ஐடி தவிர மற்ற அனைத்துத் துறை நிறுவன பங்குகளின் மதிப்பும் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
நேற்று (மே 19) வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பா.ஜ.,வே மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 272 இடங்களை விடவும் கூடுதலாக பெறும் என்றும், இந்த முறை பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், சந்தை எதிர்பார்ப்புக்களை விடவும் ஆளும் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெறும் என கருத்துகணிப்புக்கள் தெரிவித்துள்ளன. கருத்து கணிப்புக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்தால் வளர்ச்சி பாதிக்கப்படும், பொருளாதார மந்தை நிலை ஏற்படும், சர்வதேச சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என கருதப்பட்டது. தற்போது கருத்துகணிப்புக்கள் சாதகமாக அமைந்துள்ளதால் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் காணப்பட்ட போதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
பா.ஜ., தலைமையிலான அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ள கருத்துகணிப்பு முடிவுகளை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதால், ரூபாய் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 20, காலை 9.15 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து 69.44 ஆக உள்ளன. முன்னதாக கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு 70.23 ஆக இருந்தது.

Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!