கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம் கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம் ...  முதலீட்டு பார்வைகள் மாற வேண்டும் முதலீட்டு பார்வைகள் மாற வேண்டும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்­கள், ‘கிரெ­டிட் கார்டு’ விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட கார­ணம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
06:54

பல வகையான, ‘கிரெடிட் கார்டு’கள் இருப்பதால், உங்களுக்கு ஏற்ற கார்டை தேர்வு செய்து விண்ணப்பிப்பது அவசியமாகும்.

கிரெ­டிட் கார்டை பொருத்­த­வரை அதன் தன்மை உணர்ந்து கவ­ன­மாக கையாண்­டால், அதிக பலன் பெற­லாம். அதற்­கேற்ப சந்­தை­யில் பல வகை­யான கிரெ­டிட் கார்­டு­களும் இருக்­கின்­றன. கேஷ்­பேக் சலுகை, பரி­சுப்­புள்­ளி­கள் உள்­ளிட்ட பல சலு­கை­களை கிரெ­டிட் கார்­டு­கள் வழங்­கு­கின்­றன. ஒன்­றுக்­கும் மேற்­பட்ட கிரெ­டிட் கார்டை பயன்­ப­டுத்­து­ப­வர்­களும் இருக்­கின்­ற­னர். இவற்றை எல்­லாம் உணர்ந்து, நீங்­களும் கிரெ­டிட் கார்டு பெற தீர்­மா­னித்து முயற்­சிக்­கும் போது, உங்­கள் விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்டால் ஏமாற்­ற­மாக இருக்­கும். இதை, தனிப்­பட்ட நிரா­க­ரிப்­பாக எடுத்­துக்­கொள்ள வேண்­டாம்.

கிரெ­டிட் கார்டு விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான பொது­வாக கார­ணங்­களை பார்க்­க­லாம். பல வகை­யான கிரெ­டிட் கார்­டு­கள் இருந்­தா­லும், அவை ஒவ்­வொன்­றும் அவற்­றுக்­கான குறைந்­த­பட்ச வரு­மான தேவையை கொண்­டி­ருக்­கும். விண்­ணப்­பம் ஏற்­கப்­பட இதற்கு பொருத்­த­மா­ன­வராக இருப்­பது அவ­சி­யம். எனவே, கிரெ­டிட் கார்­டுக்கு விண்­ணப்­பிக்­கும் முன், குறிப்­பிட்ட வகை கார்­டுக்­கான வரு­மா­னம், வயது ஆகிய அம்­சங்­களை அறிந்து விண்­ணப்­பிக்­க­வும்.

உங்­க­ளுக்கு ஏற்ற கார்டை தேர்வு செய்து விண்­ணப்­பித்­தால், நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறைவு. எனவே, சரி­யான கார்­டுக்கு விண்­ணப்­பிப்­பது முக்­கி­யம். கிரெ­டிட் கார்டு தேவைக்­கான எல்லா தகு­தி­களும் இருந்து, உங்­கள், ‘கிரெ­டிட் ஸ்கோர்’ குறை­வாக இருந்­தா­லும் விண்­ணப்­பம் ஏற்­கப்­ப­டா­மல் போக­லாம். கிரெ­டிட் ஸ்கோர் எனப்­படும் கடன் தகுதி புள்­ளி­கள் அதி­க­மாக இருந்­தால், கிரெடிட் கார்­டுக்கு விண்­ணப்­பிக்­கும் போது உங்­க­ளுக்கு சாத­க­மாக இருக்­கும். கார்டு பெறு­வ­தற்கு மட்­டும் அல்­லா­மல், மற்ற அம்­சங்­க­ளி­லும் சாத­க­மான வாய்ப்­பு­களை பெற­லாம். ஆகவே, கிரெடிட் ஸ்கோர் குறை­வாக இருந்­தால், அதை சரி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.

கார்டு விண்­ணப்­பத்தை பூர்த்தி செய்­வ­தி­லும் கவ­ன­மாக இருக்க வேண்­டும். விண்­ணப்­பத்­தில் தக­வல்­களை சரி­யாக பூர்த்தி செய்­ய­வில்லை என்­றா­லும் நிரா­க­ரிக்­கப்­ப­ட­லாம். கேட்­கப்­பட்­டி­ருக்­கும் அனைத்து தக­வல்­க­ளை­யும் சரி­யாக அளிப்­ப­தோடு, முக­வரி, ஊதிய சான்­றி­தழ், சேமிப்பு கணக்கு அறிக்கை போன்ற தேவை­யான ஆவ­ணங்­க­ளை­யும் சரி­யாக சமர்ப்­பிப்­பது முக்­கி­யம். இவை எல்­லாம் சரி­யாக இருந்­தால் கூட, விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டால், உங்­கள் பகு­தி­யில் குறிப்­பிட்ட கார்­டுக்­கான சேவை அளிக்­கப்­ப­டா­தது கார­ண­மாக இருக்­க­லாம்.

கிரெ­டிட் கார்டு பெறும் ஊக்­கத்­தில், ஒரு விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வு­டன், இன்­னொரு கார்­டுக்கு விண்­ணப்­பிக்க கூடாது. கிரெ­டிட் ஸ்கோர் குறை­வாக இருப்­ப­தால் ஒரு வங்கி நிரா­க­ரித்­தது என்­றால், அடுத்த வங்­கி­யும் அதே கார­ணத்­திற்­காக நிரா­க­ரிக்­க­லாம். இந்த நிரா­க­ரிப்பு, கிரெ­டிட் ஸ்கோரை மேலும் பாதிக்­கும் என்­பதை மன­தில் கொள்ள வேண்­டும். நிரா­க­ரிப்­புக்­கான கார­ணத்தை கண்­ட­றிந்து, அதை சரி செய்த பிறகே புதி­தாக விண்­ணப்­பிக்க வேண்­டும்.

இந்த அம்­சங்­களை எல்­லாம் மன­தில் கொண்டு, உங்­க­ளுக்கு பொருத்­த­மான கிரெ­டிட் கார்டை தேர்வு செய்­வது நல்­லது. பல வகை­யான கார்­டு­க­ளை­யும், அவை தரும் பலன்­க­ளை­யும் ஒப்­பிட்டு, உங்­க­ளுக்கு அதிக பலன் அளிக்­கும் அம்­சங்­கள் கொண்ட கார்டை தேர்வு செய்ய வேண்­டும். பரி­சுப்­புள்­ளி­கள், கேஷ்­பேக் போன்ற குறிப்­பிட்ட பலன்­களை பெறு­வ­தற்­கான நிபந்­த­னை­கள், கார்டு பயன்­பாட்­டிற்­கான ஆண்டு கட்­ட­ணம் போன்ற அம்­சங்­க­ளை­யும் அறிந்து கொள்ள வேண்­டும். மேலும், கிரெ­டிட் கார்டு பயன்­பாட்­டிற்­கான மாத பட்­ஜெட்டை தீர்­மா­னித்­து, அதன்­படி செயல்­பட வேண்­டும். கார்டு பயன்­பாட்­டால் கடன் சுமை ஏற்­ப­டா­மல் இருக்க, இந்த கட்­டுப்­பாடு உத­வும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)