ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ மீண்டும் குறையும் ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ மீண்டும் குறையும் ...  ‘ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங்’ கண்காட்சி ‘ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங்’ கண்காட்சி ...
டாலர் கண்காணிப்பில் இந்தியா நீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2019
06:27

வாஷிங்டன் : டாலர் கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை, அமெரிக்கா நீக்கியுள்ளது. இரு நாடுகளின் அன்னியச் செலாவணி செயல்பாடுகள், சந்தேகத்திற்கிடமின்றி உள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பரஸ்பர வர்த்தகம் புரியும் நாடுகளின் அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது.அளவிற்கு அதிகமாக, அமெரிக்க டாலரை குவித்து, அன்னியச் செலாவணி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகள், கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படுகின்றன.சீனாஇதில், அமெரிக்கா முதன் முறையாக, 2018, மே மாதம், இந்தியாவைச் சேர்த்தது. இத்துடன், சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், இப்பட்டியலில் உள்ளன.


இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை, பரஸ்பர வர்த்தக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அன்னியச் செலாவணி கொள்கைகள் தொடர்பான அறிக்கையை, பார்லி.,யில் அளித்தது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்திய ரிசர்வ் வங்கி, 2017ல், அதிக அளவில் டாலரை வாங்கிக் குவித்தது. அதனால், 2018ல், அன்னியச் செலாவணி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில், இந்தியா சேர்க்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டில், ரிசர்வ் வங்கி, அதன் கையிருப்பில் உள்ள டாலரை, பெருவாரியாக விற்பனை செய்துள்ளது.அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்பான, பன்னாட்டு நிதியத்தின் வழிகாட்டுதலை, இந்தியா சரியாக கடைப்பிடித்து வருகிறது.


அதனால், 2018ல், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின், அன்னியச் செலாவணி கொள்முதல், குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.இரு நாடுகளும், அன்னியச் செலாவணி கொள்முதலில், தொடர்ச்சியாக, ஒருதலைப்பட்சமான செயல்களில் ஈடுபடவில்லை.முன்னேற்றம்கரன்சி கண்காணிப்பில், மூன்று முக்கிய அளவீடுகளில் ஒன்றான, பரஸ்பர வர்த்தகத்தை, குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா அதிகரித்துக் காட்டியுள்ளது. மத்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகளால், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அன்னியச் செலாவணி பரிவர்த்தனை தொடர்பான, அமெரிக்காவின் சில முக்கிய கவலைகளுக்கும், மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது.அமெரிக்கா, அன்னியச் செலாவணி கண்காணிப்பு பட்டியலில், இந்தியாவை சேர்த்ததும், ரிசர்வ் வங்கி, அதன் சந்தை நிலைப்பாட்டை மாற்றியது. கடந்த, 2018ம் ஆண்டில், ஜன., – ஜூன் வரையிலான காலத்தில், அதிக அளவில் டாலரை விற்பனை செய்தது. இது, முந்தைய ஆண்டில் கொள்முதல் செய்ததை விட, அதிகம்.


இதன் காரணமாக, அன்னியச் செலாவணியின் நிகர விற்பனை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.2 சதவீதமாக குறைந்தது.இது குறித்து, கடந்த ஆண்டு, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப்பட்ட இரு அறிக்கைகளில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா போன்று, சுவிட்சர்லாந்து நாடும், பன்னாட்டு நிதியம் வகுத்துள்ள, அன்னியச் செலாவணி விதிமுறைகளை பாரபட்சமின்றி கையாள்கிறது. அதனால், இந்தியாவும், சுவிட்சர்லாந்தும், கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து, இந்தியாவை அமெரிக்கா அகற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)