ஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சதவீதமாக சரிவுஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சதவீதமாக சரிவு ...  இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை நீக்கினார் டிரம்ப் இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மாருதி சுசூகி’ விற்பனை மே மாதத்தில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2019
23:47

புதுடில்லி:நாட்டின் வாகன தயாரிப்பில், மிகப் பெரிய நிறுவனமான, ‘மாருதி சுசூகி’யின் விற்பனை, மே மாதத்தில், 22 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

மே மாதத்தில், மாருதி சுசூகி நிறுவனம், மொத்தம், 1.35 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே மாதத்தில், 1.73 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, 22 சதவீத சரிவை சந்தித்துள்ளது இந்நிறுவனம். உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 23.1 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


நடப்பாண்டு மே மாதத்தில், உள்நாட்டில் மொத்தம், 1.26 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், மே மாதத்தில், 1.63 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தன.‘ஆல்ட்டோ, வேகன் ஆர்’ உள்ளிட்ட சிறிய ரக கார்களை பொறுத்தவரை, 16 ஆயிரத்து, 394 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.


ஆனால், கடந்த ஆண்டு மே மாதத்தில், 37 ஆயிரத்து, 864 கார்கள் விற்பனை ஆகியிருந்தன. இது, 56.7 சதவீத சரிவாகும்.‘சுவிப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர்’ உள்ளிட்ட, காம்பாக்ட் ரக கார்களை பொறுத்தவரை, 70 ஆயிரத்து, 135 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு, மே மாதத்தில், 77 ஆயிரத்து, 263 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, 9.2 சதவீத சரிவாகும்.‘செடான்’ ரக காரான, ‘சியாஸ்’ விற்பனை, 3,592. இதுவே, கடந்த ஆண்டு மே மாதத்தில், 4,024 கார்கள் விற்பனை ஆகியிருந்தன.பன்முக பயன்பாட்டு வாகனங்களான, ‘விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா’ ஆகியவற்றின் விற்பனை, 25.3 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில், 25 ஆயிரத்து, 629 கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் 19 ஆயிரத்து, 152 கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஏற்றுமதியும், 2.4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், 9,312 கார்கள் என்றிருந்த நிலை மாறி, இந்த ஆண்டு மே மாதம், 9,089 கார்களாக குறைந்துவிட்டன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)