இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை நீக்கினார் டிரம்ப் இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு ... ... கல்­வி கடன் வச­தியை நாடும் போது கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்­கள் கல்­வி கடன் வச­தியை நாடும் போது கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்­கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2019
00:19

இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த மூன்று மாதங்களாக உச்­சத்­தில் வர்த்­த­க­மாகி வரு­கின்­றன. மார்ச் மாதம், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘நிப்டி’ 800 புள்­ளி­கள் வரை உயர்ந்து வர்த்­த­க­மா­னது.


ஆரம்­பத்­தில், லோக்­சபா தேர்­த­லில், பா.ஜ.,வுக்கு சாதக­மான முடி­வு­கள் வரும் என்ற எதிர்­பார்ப்­பில், பங்­குச் சந்­தை­கள் உயர ஆரம்­பித்­தன. அதன் பின், தேர்­தல்கள் நடை­பெற்ற ஏப்­ரல் மாதத்­தில், பெரிய அள­வி­லான மாற்றங்­கள் எது­வும் இல்­லா­மல், 400 புள்­ளி­கள் ஏற்ற இறக்­கங்­க­ளு­டன், அப்­போ­தைய வர்த்­த­கம் முடிவு பெற்­றது.


லோக்­சபா தேர்­தல் முடி­வு­கள் எதிர்­பார்த்­த­தை போலவே அமைந்­த­தும், அதன் கார­ண­மாக, நிப்டி, 1,000 புள்­ளி­க­ளுக்கு மேல் உயர்ந்து, வர­லாற்று உச்­சத்தை அதாவது, 12 ஆயி­ரம் புள்­ளி­களை தாண்­டி­யது.இதைப் போலவே, மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘சென்­செக்ஸ்’ 40 ஆயி­ரம் புள்­ளி­களை தாண்டி, வர­லாற்று உயர்வு அடைந்­தது.சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை, கடு­மை­யாக சரிந்­தது. இது, இந்­திய பொருளாதாரத்­திற்கு சாத­க­மாக அமைந்­தது.


இத­னால், நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை குறை­யும்; பெட்­ரோ­லிய பொருட்­க­ளின் மீதான பண­வீக்­கம் குறை­யும் என்ற எதிர்­பார்ப்­பு­கள் எழுந்­தன. இது, சந்­தை­யில் பங்­கு­கள் விலை உயர, ஒரு வகை­யில் காரணமாக அமைந்­தது. மேலும், டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு அதி­க­ரிப்­பும், இந்த உயர்­வுக்கு சாத­க­மாக அமைந்­தது.


கடந்த நிதி­யாண்­டின் நான்­காம் காலாண்­டான, ஜனவரி முதல், மார்ச் வரை­யி­லான கால­கட்­டத்­தில், இந்­தி­யா­வின், ஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சத­வீ­த­மாக இருந்­த­தாக, மத்­திய அர­சின் புள்­ளி­வி­ப­ரம் தெரி­விக்­கிறது. இது, கடந்த ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத குறை­வா­கும்.மேலும், நடப்பு நிதி­யாண்­டில், ஜி.டி.பி., வளர்ச்சி, 7.1 சத­வீ­த­மா­க­வும், அடுத்த நிதி­யாண்­டில், 7.2 சத­வீத­மா­க­வும் இருக்­கும் என்று, கருத்­துக் கணிப்பு விப­ரம் வெளியிடப்­பட்­டுள்­ளது.


பண­வீக்க விகி­தம் மற்­றும் பொரு­ளா­தார வளர்ச்சி எதிர்­பார்ப்பு ஆகி­ய­வற்றை, ரிசர்வ் வங்கி குறைத்­துள்­ளது. முந்தைய நிதி­யாண்­டின் நான்­காம் காலாண்­டில், பண­வீக்க விகி­தம், 2.4 சத­வீ­த­மா­க­வும், நடப்பு நிதி­யாண்­டின் முதல் ஆறு மாதங்­க­ளுக்கு, பண­வீக்க விகி­தம், 3.2 சத­வீ­த­மா­க­வும் இருக்­கும் என்­றும் மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதற்கு முன் இது, 3.4 சத­வீ­த­மாக மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.


மத்­தி­யில், புதிய அமைச்­ச­ரவை பொறுப்­பேற்­றுள்­ளது. இதை­ய­டுத்து, இம்­மாத மத்­தி­யில், பார்லி., பட்­ஜெட் கூட்டத்­தொ­டர் ஆரம்­பிக்­கப்­பட உள்­ளது. அடுத்த மாதம், 5ம் தேதி, நடப்பு நிதி­யாண்­டின் பட்­ஜெட் சமர்ப்­பிக்­கப்­பட­லாம் எனத் தெரி­கிறது.இம்­மா­தம், தென் மேற்கு பருவ மழை ஆரம்­பிக்க உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு பருவ மழை சற்று குறை­வாக இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.


இது போன்ற கார­ணங்­களை முன்­னி­றுத்­தியே, இந்த வார பங்­குச் சந்­தை­க­ளின் போக்கு அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இந்த வாரம் நிப்­டியை பொறுத்­த­வரை, அதன் சப்­போர்ட், 11860 மற்­றும் 11800; ரெசிஸ்­டென்ஸ், 12010 மற்­றும் 12135.

முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)