இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை நீக்கினார் டிரம்ப் இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு ... ...  காப்பாற்றுமா, கருணையும் கண்டிப்பும் காப்பாற்றுமா, கருணையும் கண்டிப்பும் ...
கல்­வி கடன் வச­தியை நாடும் போது கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2019
00:32

உயர் கல்விக்கான செலவை சமாளிக்க, கல்விக் கடன் வசதி பெற தீர்மானிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளன.


உயர் கல்­விக்­கான முக்­கி­யத்­து­வம் அதி­க­ரித்து வரு­வது போலவே, செல­வும் அதி­க­ரித்து வரு­கிறது. கல்வி நிறு­வ­னங்­களில் இடம் கிடைப்­ப­தற்­கான போட்டி அதி­க­ரித்­துள்ள நிலை­யில், கல்­விக்­கட்­ட­ண­மும் அதி­க­ரித்­துள்­ளது.அதி­லும் குறிப்­பாக வெளி­நாட்டு கல்வி எனில், செலவு இன்­னும் அதிக­மாக இருக்­கிறது. எனவே, உயர் கல்வி கனவை நிறை­வேற்­றிக்­கொள்ள, பல­ரும் கல்­விக் கடன் வச­தியை நாடு­வதை வழக்­க­மாக கொண்­டுள்­ள­னர்.



கல்­விக் கடன் பெறு­வது தொடர்­பாக மற்ற அம்­சங்­க­ளை­யும் கருத்­தில் கொள்ள வேண்­டும்.
கல்­விக் கடன் பெறு­வது எப்­படி? எனும் கேள்வி மட்­டும் முக்­கி­யம் அல்ல, கல்­விக் கடன் தேவையா எனும் கேள்­வி­யும் முக்­கி­ய­மா­னது. கல்­விக் கடன் என்­பது, பயிற்சி கட்­ட­ணம் தவிர, தங்­கு­மி­டம் உள்­ளிட்ட செல­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக அமைய வாய்ப்பு இருக்­கிறது.



எனி­னும், பல பெற்­றோர், கடன் வச­தியை நாடு­வதா அல்­லது சேமிப்பை பயன்­ப­டுத்­திக்­கொள்­வதா என்ற, தடு­மாற்­றத்­திற்கு உள்­ளா­கின்ற­னர். படிப்பை முடித்து, பணியை துவக்­கும் போது
பிள்­ளை­கள் கட­னும் துவங்க வேண்­டாம் என, நினைப்­பது இதற்கு முக்­கிய கார­ணம்.கட­னுக்கு பதில் சேமிப்பை பயன்­ப­டுத்­திக்­கொள்­வது சிறந்த தேர்வு என்­றா­லும், உயர் கல்­விக்கு என்று முன்­ன­தா­கவே திட்­ட­மிட்டு சேமித்­தி­ருந்­தால் மட்­டுமே, இது சாத்­தி­யம்.




அத்­த­கைய சேமிப்பு இல்­லாத போது, மற்ற சேமிப்­பின் மீதே கை வைக்க வேண்­டி­யி­ருக்­கும்.
இது­வும் பாத­க­மா­னதே. அதி­லும் குறிப்­பாக ஓய்வு காலத்­திற்­கான சேமிப்பை கொண்டு பிள்­ளை­கள் உயர் கல்வி தேவையை பூர்த்தி செய்­வது ஏற்­றது அல்ல. இது போன்ற சூழ­லில் கல்வி கடன் வச­தியே ஏற்றது.கடன் பெறு­வ­தற்கு முன், தேர்வு செய்­துள்ள கல்வி நிறு­வ­னம் மற்­றும் பாடத்­திட்­டம் ஏற்­றதா என்­ப­தை­யும் பார்க்க வேண்­டும். மதிப்பு மிக்க கல்வி நிறு­வ­னங்­கள் எனில், கடன் கிடைப்­பது எளிது என்­ப­தோடு, படிப்பை முடித்­த­வு­டன் வேலை கிடைப்­ப­தும் எளி­தாக இருக்­கும்.




அதே போல, எதிர்­கால தேவை­யுள்ள, பணி வாய்ப்­புள்ள பாடத்­திட்­டங்­களை தேர்வு செய்ய வேண்­டும். அதிக வாய்ப்­பில்­லாத பாடத்­திட்­டம் எனில் கடன் வசதி சுமை­யாக மாறி­வி­ட­லாம். மற்ற கடன் போலவே கல்­விக் கட­னை­யும் திரும்பி செலுத்த வேண்­டும். வேலைக்கு சேர்ந்த ஆறு மாத காலத்­தில் அல்­லது படிப்பை முடித்த ஓராண்­டில், கடன் தவ­ணையை செலுத்த துவங்க வேண்­டும்.



எனவே, படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு பெறு­வதை உறுதி செய்து கொள்ள வேண்­டும்.
‘கேம்­பஸ் இன்டர்வியூ’ போன்­ற­வற்­றில் சிறந்து விளங்­கும் கல்வி நிறு­வ­னங்­களை தேர்வு செய்­வது நல்­லது. குறிப்­பிட்ட துறை அல்­லது திற­னில் நிபு­ணத்­து­வம் பெற உத­வும் பாடத்­திட்­டங்­களும் எளி­தாக வேலை பெற்­றுத்­த­ரும்.


கல்­விக் கடன் வச­தியை நாடு­வ­தில் உள்ள சாதகம் என்­ன­வெனில், அதற்கு செலுத்­தும்
வட்­டிக்கு வரிச்­ச­லுகை பெற­லாம் என்­பதே. படித்து முடித்­த­வு­டன் நல்ல சம்­ப­ளத்­தில் வேலை கிடைத்­தால், வரிச்­ச­லுகை பய­னுள்­ள­தாக இருக்­கும். இது, கடன் வர­லாற்றை உரு­வாக்கி கொள்­ள­வும் உத­வும். பல நேரங்­களில் சேமிப்பை விட, கடன் வச­தியை நாடு­வது வரி
விஷ­யத்­தி­லும் உத­வி­யாக இருக்­கும். கண்ணை மூடிக்­கொண்டு கடன் பெறு­வதை விட, அனைத்து அம்­சங்­க­ளை­யும் கவ­ன­மாக பரி­சீ­லித்து முடிவு எடுக்க வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)