பதிவு செய்த நாள்
05 ஜூன்2019
23:34

புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த மே மாதத்தில், 12 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவினை சந்தித்துள்ளது என, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், நிக்கி – மார்க்கிட், ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 50.2 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது. இது, ஏப்ரலில், 51.0; மார்ச்சில், 52; பிப்ரவரியில், 52.5 புள்ளிகளாக இருந்தது. ஏப்ரலில் சேவைகள் துறையின் வளர்ச்சி, ஏழு மாதங்கள் காணாத சரிவை சந்தித்தது.மே மாதத்தில், கடந்த, 12 மாதங்களில் காணாத சரிவினை சந்தித்துள்ளது.
எனினும், 50க்கும் மேற்பட்ட புள்ளிகள், வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழாக இருந்தால் வீழ்ச்சியை குறிக்கும். அந்த வகையில் சேவைகள் துறை, தொடர்ந்து, 12 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது. மே மாதத்தில் இந்த, 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி குறைவாக இருக்கிறது.கடந்த ஏப்ரல் மாதத்தைப் போலவே, மே மாதத்திலும், லோக்சபா தேர்தல் காரணமாக, சேவைகள் துறை வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இருப்பினும், புதிய வேலைகள், வியாபார நடவடிக்கைகள் காரணமாக, ஓரளவு பாதிப்பில் இருந்து தப்பியுள்ளது.மந்த நிலைக்கான சமிக்ஞைகள் இருந்தாலும், அவை குறுகிய காலத்துக்கே இருக்கும் என்பதும், இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கு, நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு அமர்த்துவது அதிகரித்திருப்பது, எதிர்காலம் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை ஆகியவை காரணமாக இருக்கின்றன.
இதற்கிடையே, இந்தாண்டு, மே மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின், கூட்டு, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 51.7 புள்ளிகளாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலையிலிருந்து இதில் எந்த மாற்றமும் இல்லை.தற்போது புதிய அரசு அமைந்திருக்கிறது. புதிய அரசின் கொள்கை முடிவுகள் முன்பிருந்தபடியே தொடரும் என்பதால், நடப்பாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து, வளர்ச்சிப் பாதைக்கு சேவைகள் துறை மீண்டும் திரும்பும் என, எதிர்பார்க்கலாம்.
சர்வேயில் பணவீக்கத்தின் பாதிப்பு இருப்பது தெரிய வந்திருப்பதை அடுத்து, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.ரிசர்வ் வங்கி, வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்பினை நாளை வெளியிட இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|