பதிவு செய்த நாள்
06 ஜூன்2019
12:28

மும்பை : குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் இந்தாண்டில் மூன்றாவது முறையாக 0.25 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. நெப்ட்(NEFT), (ஆர்டிஜிஎஸ்)RTGS போன்ற ஆன்லைன் பணம் பரிமாற்றத்திற்கான கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்து பா.ஜ., மீண்டும் ஆட்சியை அமைத்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிநிலைக்கூட்டம் கடந்த மூன்று தினங்களாக கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
3வது முறையாக குறைப்பு
அதன்படி, ரெப்போ வட்டி வகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கான வட்டி விகிதமும் 6 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வீடு வாகன வட்டி குறையும்
ரெப்போ ரெட்டி வகிதம் குறைக்கப்பட்டதன் மூலம் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் மீதான வட்டி வகிதம் குறைய வாய்ப்பாக அமைந்துள்ளது. நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 7.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. பணவீக்கம் முதல் காலாண்டில் 3 முதல் 3.1 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 3.4 முதல் 3.7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக் கொள்கைளையும் மக்களுக்கு பயன் உள்ளதாக மாற்ற ரிசவர் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஆன்லைன் பணபரிவர்த்தனை தொடர்பான நெப்ட்(NEFT), (ஆர்டிஜிஎஸ்)RTGS போன்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பிற ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் இதன் முதல் கூட்டம் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|