கடனை அதிகம் நாடும் இளம் பெண்கள்கடனை அதிகம் நாடும் இளம் பெண்கள் ...  சேமிப்பு கணக்கு சலுகை ரிசர்வ் வங்கி அறிவிப்பு சேமிப்பு கணக்கு சலுகை ரிசர்வ் வங்கி அறிவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டெப்ட் பண்ட்’ முத­லீட்­டா­ளர்­கள் என்ன செய்ய வேண்­டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2019
00:12

வட்டி விகிதம் குறைய துவங்கியிருப்பது, பல்வேறு வகையான, ‘டெப்ட் பண்ட்’ ரக மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மீது தாக்கம் செலுத்தும்.


ரிசர்வ் வங்கி, ரெப்போ விகி­தத்தை, தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக, 25 அடிப்­படை
புள்­ளி­கள் குறைத்­துள்­ளது. இதன் கார­ண­மாக, ரெப்போ விகி­தம், 2010ம் ஆண்­டுக்கு பின், முதல்
முறை­யாக, 6 சத­வீ­தத்­திற்கு குறை­வாக அமைந்­துள்­ளது.


வளர்ச்சி விகி­தம் குறித்த கவலை நில­வும் சூழ­லில், வட்டி குறைப்பு மற்­றும் பண­மாக்­கும் தன்­மையை ஊக்­கம் அளிக்­கும் அம்­சங்­க­ளாக கருதி, ரிசர்வ் வங்கி செயல்­பட்­டு
உள்­ள­தாக கரு­தப்­ப­டு­கிறது. மேலும், ரிசர்வ் வங்­கி­யின் நிலைப்­பாடு, குறைந்த வட்டி சூழல் தொட­ரும் என்­ப­தை­யும் உணர்த்­து­வதாக அமைந்­துள்­ளது.

வட்டி விகிதம்

ரெப்போ வகி­தம் குறைக்­கப்­பட்­டி­ருப்­பது, வீட்­டுக்­க­டன் வட்டி விகி­தம், டெபா­சிட் வட்டி விகி­தம் உள்­ளிட்­ட­வற்­றில் தாக்­கம் செலுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதே போல, டெப்ட் பண்ட் எனப்­படும் கடன் சார் மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­க­ளி­லும் தாக்­கம் செலுத்­தும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

பல வகை­யான டெப்ட் பண்ட் திட்­டங்­கள் மீது, அவற்­றின் முத­லீட்டு நோக்­கத்­திற்கு ஏற்ப
வட்டி குறைப்­பின் தாக்­கம் அமை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.வட்டி குறைப்பு கார­ண­மாக,
பத்­தி­ரங்­கள் அளிக்­கும் பலன் குறைந்து, அவற்­றில் முத­லீடு செய்துள்ள, டெப்ட் பண்ட் பலன் மீது தாக்­கம் செலுத்­தும். எனி­னும், எல்லா வகை­யான டெப்ட் பண்ட் மீதான தாக்­க­மும், ஒரே வித­மாக அமைய வாய்ப்­பில்லை.



கூப்­பன்­கள் மீதான வரு­மா­னம் மீது பிர­தா­ன­மாக வரு­வாய் ஈட்­டும் நிதி­கள், அதன் கார­ண­மாக குறைந்த வரு­வாய் ஈட்­டும் நிலை உரு­வா­கும். ஓவர்­நைட் பண்ட் மற்­றும் லிக்­விட் பண்ட்­கள் இந்த பிரி­வில் வரு­கின்­றன. இவை குறைந்த கால முத­லீட்டு சாத­னங்­களில் முத­லீடு செய்­கின்­றன.பத்­தி­ரங்­கள் அளிக்­கும் வரு­மானம் மற்­றும் அவற்­றின் மதிப்பு உயர்வு மீதான பலன், இரண்­டை­யும் சார்ந்­தி­ருக்­கும் நிதி­களும் இருக்­கின்­றன. வட்டி விகி­தம் குறை­யும் சூழ­லில்,
அதிக வட்டி பலன் கொண்ட பத்­தி­ரங்­க­ளின் மதிப்பு உய­ரும்.


இத்­த­கைய பத்­தி­ரங்­களை கொண்­டி­ருக்­கும், நிதி­கள் அவற்­றின் மதிப்பு உயர்­வ­தால் பலன் பெறும். பத்­தி­ரத்­தின் காலம் நீண்­ட­தாக இருப்­ப­தற்கு ஏற்ப, வட்டி விகித மாற்­றம் கார­ண­மாக, அதன் மதிப்­பின் மீதான தாக்­க­மும் அமை­யும். கில்ட் பண்ட் போன்­றவை இந்த பிரி­வில்
வரு­கின்­றன.இந்த சூழ்­நி­லை­யில், முத­லீட்­டா­ளர்­கள், அதிக பலன் பெறக்­கூ­டிய நிதி­க­ளுக்கு மாற வேண்­டுமா? எனும் கேள்வி இயல்­பாக எழுந்­தா­லும், இதற்­கான பதில் அவர்­கள் நோக்­கத்தை பொருத்தே அமை­யும்.



எச்சரிக்கை தேவை

முத­லீட்­டா­ளர் நிலை­யான வரு­மா­னத்தை நாடு­வதை பிர­தான நோக்­க­மாக கொண்­டி­ருந்­தால்,
குறு­கிய கால நிதி­கள், கார்ப்­ப­ரேட் நிதி­கள், வங்கி, பொதுத்­துறை நிறு­வன நிதி­கள் ஏற்­ற­தாக இருக்­கும். வட்டி விகித குறை­வால், மதிப்பு உயர்­வின் பலனை பெற விரும்­பி­னால், நீண்ட கால பத்­தி­ரங்­கள் சார்ந்த நிதி­களை நாட­லாம்.எனி­னும், பத்­திர சந்­தை­யில் கடந்த ஆண்டு பிற்பகு­தி­யில் உண்­டான, கடன் நெருக்­கடி இன்­ன­மும் தீர்ந்­து­வி­ட­வில்லை என்­பதை,
முத­லீட்­டா­ளர் மன­தில் கொள்ள வேண்­டும். டெப்ட் பண்ட்­களை தேர்வு செய்­வ­தில் முத­லீட்­டா­ளர்­கள், அதிக கவ­னம் செலுத்த வேண்­டும்.


பலனை விட, பாது­காப்பு மற்­றும் பண­மாக்­கும் தன்­மையை நாடும், நிதி­களை தேர்வு செய்­வ­தும் பொருத்­த­மாக இருக்­கும் என, வல்­லு­னர்­கள் கரு­து­கின்­ற­னர். முத­லீட்­டா­ளர்­கள், நீண்ட கால நிலை­யான தன்­மை­யை­யும் முக்­கிய அம்­ச­மாக கருத வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)