பதிவு செய்த நாள்
11 ஜூன்2019
03:11

புதுடில்லி:நாட்டின், மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ மே மாதத்தில், அதன் உற்பத்தியை, 18 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது.தொடர்ந்து, நான்காவது மாதமாக, உற்பத்தி குறைப்பை இந்நிறுவனம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மே மாதத்தில், 1.51 லட்சம் வாகனங்களை, இந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், 1.84 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்நிறுவனம், 10 சதவீதம் உற்பத்தி குறைப்பை மேற்கொண்டது. மார்ச் மாதத்தில், 20.9 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில், 8 சதவீதம் குறைக்கப்பட்டது. கடந்த வாரம், ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனமும், நடப்பு காலாண்டில், 13 நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|