பதிவு செய்த நாள்
11 ஜூன்2019
03:22

மறு சீரமைப்பு செய்த வணிக வரி துறையில், புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளுக்கு, போதிய வசதி ஏற்படுத்தி தரவில்லை என, அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.கடந்த, 2017ம் ஆண்டு ஜூலை மாதம், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அறிமுகமானது.
இத்சட்டத்தின் கீழ், வரி நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்த, தமிழக வணிக வரி துறை, மறு சீரமைப்பு செய்யப்பட்டது.இதில், வணிக வரி துறையில் செயல்பட்டு வரும், செயலாக்கப் பிரிவு, ‘நுண்ணறிவுப் பிரிவு’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஜூன் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளில், போதிய வசதி ஏற்படுத்தி தரவில்லை என, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, வணிக வரி துறை அதிகாரிகள் கூறியதாவது:மறுசீரமைப்பு செய்து, பல்வேறு புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஜூன் முதல் செயல்பட துவங்கி விட்டன.ஆனால், இதற்கான அலுவலகம், தேவையான வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. மறுசீரமைப்பு நல்ல திட்டம் தான். ஆனால், அதற்கான வசதிகளை ஏற்படுத்திய பின், நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். எனவே, முறையான வசதிகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|