பதிவு செய்த நாள்
11 ஜூன்2019
23:40

லண்டன்:உலகளவில், நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகளில், முதல் இடத்தை, ‘அமேசான்’ பிடித்துள்ளது.
உலக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான, ‘கன்டார்’ அதன், ‘டாப் 100 பிராண்டுகள்- – 2019’ ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:முதல், 10 இடங்களில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி உள்ளன. இதற்கு முன் முதலிடத்திலிருந்த, ‘கூகுள்’ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த அமேசான், முதலிடம் பிடித்துள்ளது. ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு இரண்டாவது இடம். கையகப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவை, அமேசானுக்கு முதலிடம் பெற்று தந்துள்ளது.
‘மைக்ரோசாப்ட், விசா, பேஸ்புக்’ ஆகியவை, அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ நிறுவனம், முதன் முறையாக, ‘டென்சென்ட்’ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|