பதிவு செய்த நாள்
11 ஜூன்2019
23:48

புதுடில்லி:அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இத்தகைய வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்களுக்கு, காசோலை புத்தகம் உள்ளிட்ட, இதர குறைந்தபட்ச வசதிகள் கட்டணமின்றி வழங்கப்படும்.அதேசமயம், வங்கிகள், இத்தகைய வசதிகளை வழங்குவதற்கு, குறைந்தபட்ச இருப்புத் தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க இயலாது எனவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நிதி சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி மேலும் அறிவித்துள்ளதாவது: வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழங்க, எந்தத் தடையும் இல்லை. குறைந்தபட்ச சலுகைகள் தவிர, இதர சேவைகளை, அவை கட்டணத்துடனோ அல்லது கட்டணமின்றியோ வழங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|