ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா? ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா? ...  தொழில் துறை உற்பத்தி உயர்வு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவீதம் தொழில் துறை உற்பத்தி உயர்வு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவீதம் ...
கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
23:52

மும்பை:ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி, கடந்த, 14 மாதங்களில், 35 ஆயிரத், 400 கோடி ரூபாய் கடனை, திரும்ப செலுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.அனில் அம்பானியின் தலைமையில் இயங்கி வரும், ரிலையன்ஸ் குழுமம், 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது.இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனில் அம்பானி, கடந்த, 14 மாதங்களில், 35 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடனை, திரும்ப செலுத்தி விட்டதாகத் தெரிவித்தார். நிறுவனச் சொத்துகள் விற்பனை மூலம், இந்தத் தொகையை திரட்டி, கடனை அடைத்ததாகவும், அவர் கூறினார்.அண்மையில், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ஏழு நிறுவனங்களின் பங்குகள், கடும் சரிவைச் சந்தித்தன. மேலும், இந்நிறுவனங்கள், ஜனவரியிலிருந்து இதுவரை, 65 சதவீதத்துக்கும் மேலான சந்தை மதிப்பிழப்பையும் சந்தித்தன.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், 24 ஆயிரத்து, 800 கோடி ரூபாயை கடன் தொகையாகவும், 10 ஆயிரத்து, 600 கோடி ரூபாயை வட்டியாகவும் திருப்பிச் செலுத்தியுள்ளது,ரிலையன்ஸ் குழுமம்.கடனை அடைக்கும் முயற்சியில் ஒன்றாக, ரிலையன்ஸ் குழுமம் அதன் ஸ்பெக்ட்ரம் வணிகத்தை,முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு, 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்க முன்வந்தது. இதற்காக ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இம்முயற்சி நிறைவேறவில்லை.இதற்கிடையே, எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய கடன் குறித்த வழக்கில், அனில் அம்பானியால் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த இயலாமல் போய்விட்டது. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. 485 கோடி ரூபாயைச் செலுத்தாவிட்டால், மூன்று மாத சிறைத்தண்டனையைச் சந்திக்க வேண்டும் என்ற சூழலில், முகேஷ் அம்பானி இந்தத் தொகையை வழங்கிக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த இரண்டு ஆண்டுகளில், இரு முக்கிய வணிகத்தை விற்பனை செய்துள்ளார், அனில் அம்பானி. மும்பையில் உள்ள, ரிலையன்ஸ் பவர் வினியோக வணிகத்தை, அதானி குழுமத்துக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். அடுத்து, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, மியூச்சுவல் பண்டு நிறுவனப் பங்குகளை, நிப்பான் நிறுவனத்துக்கு விற்பனை செய்தார்.இவை தவிர, வானொலி சேவையான, ‘பிக்’ எப்.எம்., வணிகத்தின் பெரும்பான்மையான பங்குகளை, 1,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார்.காணொளிக் காட்சி மூலம், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:கடந்த, 14 மாதங்களில், 35,400 கோடி ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தியுள்ளோம். வேறு யாரிடமும் மேற்கொண்டு கடன் வாங்காமல், வணிகங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட முயற்சிகளால் மட்டுமே, நிதியை திரட்டி, கடனை அடைத்துள்ளோம்.ரிலையன்ஸ் குழுமம், அனைத்துக் கடன்களையும், குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப செலுத்திவிடும். இதற்காக, பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி, ஜூன் 16-–கடந்த மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3.93 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை, ஆறு ... மேலும்
business news
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் ... மேலும்
business news
­புது­டில்லி:நாட்­டின், கச்சா உருக்கு உற்­பத்தி, மே மாதத்­தில், 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து, ... மேலும்
business news
­புது­டில்லி:வரப்­போ­கும் பட்­ஜெட்டை முன்­னிட்டு, தக­வல் தொழில்­நுட்­பம், ஸ்டார்ட் அப் உள்­ளிட்ட துறை­க­ளைச் ... மேலும்
business news
புதுடில்லி:தொழில் துறை – அரசு இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
Narayanan.S - Chennai,India
12-ஜூன்-201916:16:32 IST Report Abuse
Narayanan.S கடனை திருப்பி செலுத்துவது நல்லது தான் . அனால் இந்த நிறுவனத்தில் முதலீடு (பங்கு வர்த்தகம் மூலம்) செய்த சிறு பங்குதாரர்களின் நிலை என்ன அவர்களின் முதலுக்கே மோசம். எ. க. ஒரு சிறு முதலீட்டாளர் இந்த பங்கை சில வருடம் அல்லது சில மாதம் முன் ரூ. 150 /- (உதாரணத்திற்கு Reliance Communications Ltd.) வாங்கியிருந்தால் அந்த பங்கின் விலை தற்பொழுது ரூ. 1 .70 இது முகமதிப்பை விட ரூ. 3 .30 குறைவு. இந்த முதலீட்டாளர்களின் நிலை என்ன?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,India
12-ஜூன்-201911:33:55 IST Report Abuse
pradeesh parthasarathy ரபேல் ஒப்பந்தம் மூலம் பின் வாசல் வழியாக எவ்வளவு கிடைத்தது , அதனை எப்படி வெள்ளையாக மாற்றினீர்கள் என்று கூறினால் இன்னும் நன்றாக இருக்கும் ...
Rate this:
8 members
0 members
5 members
Share this comment
R.Varadarajan - Chennai,India
12-ஜூன்-201907:04:34 IST Report Abuse
R.Varadarajan அம்பானிக்கு இவ்வளவு கடன் கொடுத்து செல்லப்பிள்ளையாக வைத்துக்கொண்டது எந்த கட்சி அரசு ? இப்போது கடனை திருப்பி செலுத்த ஆர்வம் காட்டும் அம்பானி ஏன் கோங்கிஸ் ஆட்சி காலத்தில் அதனை மறந்தார் / ஒருவேளை அரசுக்கு கொடுக்கவேண்டியதை கோங்கிஸ் அரசுக்கு கொடுத்து ,அது சுவிஸ் வங்கியில் சேர்க்கப்பட்டதோ? இதே போலத்தான் மல்யா, லலித், நீரவ் மோடிகள், சோக்சி போன்றோர்களும் கோங்கிஸ் கட்சியின் செல்ல பிள்ளைகளோ ? அபார பசி
Rate this:
2 members
0 members
8 members
Share this comment
Jegan Nicholas - Tirunelveli,India
12-ஜூன்-201900:31:49 IST Report Abuse
Jegan Nicholas அணைத்து கடனாளிகளும் இவ்வாறு நடந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது . நாட்டைவிட்டு ஓடினால் காணும் இடமெல்லாம் திருடன் என்று அழைப்பதை தவிர வேறு வழி இல்லை
Rate this:
0 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)