பதிவு செய்த நாள்
14 ஜூன்2019
00:06

புதுடில்லி:வாகன உதிரி பாகங்கள், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்
களுக்கு, ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள்
கூட்டமைப்பு, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:வாகன உதிரி பாகங்கள், அலுமினிய பாத்திரங்கள் போன்றவை ஆடம்பர பொருட்கள் இல்லை. எனவே, இவற்றுக்கான, 28 சதவீத வரியை, குறைந்தபட்ச வரி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், மொபைல் உறைகள், ஐஸ் கிரீம், மார்பிள், பழைய வாகனங்கள் என, பலவற்றின் வரியை குறைக்க கோரியுள்ளோம்.
மேலும், ஜி.எஸ்.டி., பிரச்னைகளுக்காக மத்திய, மாநில அளவில், லோக்பால் அமைப்பு தேவை எனவும் கேட்டு உள்ளோம். ஆவன செய்வதாக, நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|