பதிவு செய்த நாள்
14 ஜூன்2019
00:09

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, 'அமேசான' பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பொருட்கள் வினியோகத்துக்காக, 'அமேசான் பிளெக்ஸ்' எனும், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:நிறுவனத்தின் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய, தனிநபர்கள் இதில் சேர்ந்து பணியாற்றலாம். தங்களுக்கு உகந்த நேரத்தை, தேர்வு செய்து கொள்ள முடியும். ஒரு மணி நேரத்துக்கு, 120 - -140 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இத்திட்டம் பெங்களூரு, மும்பை, டில்லி ஆகிய நகரங்களில், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில், பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், பல்லாயிரக்கணக்கானோருக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|