பதிவு செய்த நாள்
14 ஜூன்2019
00:12

சென்னை:‘‘தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, கணக்கெடுப்பின் தரத்தை மேம்படுத்த முடியும்,’’ என, தமிழக அரசின் கூடுதல் பொருளாதார செயலர், அதுல் ஆனந்த் தெரிவித்தார்.
இது குறித்து, மத்திய புள்ளியியல் மற்றும் செயல்பாட்டு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொருளாதார கணக்கெடுப்பு – -2019ல், தகவல் தொழில்நுட்பமானது, தரவுகளை சேகரிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் முக்கிய காரணியாக பயன்பட இருக்கிறது. முதல் முறையாக, பொருளாதார கணக்கெடுப்பு பணிக்காக, ‘மொபைல் செயலி’ உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொது சேவை மையங்கள் உடனும் இணைந்து செயல்பட இருக்கின்றது. தமிழகம், புதுச்சேரியின், ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி பயிற்சியாளர்களுக்கான, மாநில அளவிலான பயிற்சி பட்டறை, துவங்கப்பட்டுள்ளது.இந்த பயிற்சி பட்டறையை துவங்கி வைத்த, தமிழக அரசின் கூடுதல் பொருளாதார செயலர் அதுல் ஆனந்த், ‘‘தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதால், கணக்கெடுப்பில் தரத்தை மேம்படுத்த முடியும்,’’ என, தெரிவித்தார்.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|