பதிவு செய்த நாள்
14 ஜூன்2019
23:42

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை திட்டங்களில் ஒன்று, ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம். இத்திட்டம், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, அதன் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப் பட்டது.இத்திட்டத்தை, பிரதமர் மோடி, 2015 ஏப்ரல் 8ம் தேதி துவங்கி வைத்தார். 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்திட்டம் வெற்றிகரமாக அதன் இலக்கை நிறைவேற்றி வருகிறது.
கடந்த, 2018- – 19ம் நிதியாண்டில், இதன் இலக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் என, அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில், இலக்கை தாண்டி, 3.21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டான, 2017- 18ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கடந்த நிதியாண்டில், 23 சதவீதம் அளவுக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த நிதியாண்டின், கடைசி எட்டு நாட்களில் மட்டும், 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து, நிதித் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 3 லட்சம் கோடி ரூபாய் என்பதை, நாங்கள் தாண்டிவிட்டோம். இன்னும் ஓரிரு வாரங்களில், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
கடந்த நிதியாண்டில், சராசரியாக, வேலை நாள் ஒன்றுக்கு, 970 கோடி ரூபாய் என்ற அளவில் கடன் கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 2016 – -17ம் நிதியாண்டில், 1.80 லட்சம் கோடி ரூபாய் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை தாண்டி, கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை பொறுத்தமட்டில், 5,000 கோடி ரூபாய் குறைவாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டில், 2.44 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பினும், அதை விட, 2,000 கோடி ரூபாய் அதிகமாக கடன் வழங்கப்
பட்டு உள்ளது. கடந்த, 2018 மார்ச் மாத முடிவில், முத்ரா திட்டத்தின் கீழ், வாராக்கடனாக, 7,277 கோடி ரூபாய் இருப்பதாக பார்லிமென்டில் அறிவிக்கப்பட்டது.
கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இதுவே, 14 ஆயிரத்து, 930 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மூன்று பிரிவுகள்முத்ரா திட்டத்தின் கீழ், மூன்று வகைகளில், கடன் வழங்கப்படுகிறது. ‘சிசு’ திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை; ‘கிஷோர்’ திட்டத்தில், 50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை; ‘தருண்’ திட்டத்தில், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளின் மூலம் இக்கடன்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|